லண்டன்: இந்தியாவில் மத சகிப்புத் தன்மையின்மைக்கு இடமில்லை. மத
சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர
மோடி இங்கிலாந்தில் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அந்நாட்டு பிரதமர் கேமரூனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுகையில், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. இருநாட்டு உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளும் வலுவான ஜனநாயகம், பொருளாதாரத்தை கொண்டுள்ளன. இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் இங்கிலாந்து 3-ம் இடம் வகிக்கிறது.
இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் மையமாக இங்கிலாந்து உள்ளது. உலகிற்கு நம்பிக்கை, வாய்ப்பு அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் கேமரூன் உடன்
செய்தியாளர்களை சந்தித்தார் மோடி. அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மத சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது. இந்தியாவில் தொழில் துவங்கும் தொழில் அதிபர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். இங்கிலாந்து மற்றும், இந்தியாவிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்னை. இந்தியாவின் வளர்ச்சிக்கு இங்கிலாந்து உதவி வருவதற்கு நன்றி என்று கூறினார். முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடியும், டேவிட் கேமரூனும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக