புதன், 4 நவம்பர், 2015

அதிமுக மாஜி அமைச்சர் வெங்கடாசலம் கொலை..தேடப்பட்டவர் கைது..

அதிமுக முன்னாள் அமைச்சரின் கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள வடகாட்டைச் சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். அதிமுக முன்னாள் அமைச்சரான இவர், 2010-ம் ஆண்டு அக்.7ம் தேதி இரவு வடகாட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த கணேசன்(38), வீரகுடி முத்துக்குமார்(36),தேவகோட்டையைச் சேர்ந்த திலகேஷ்வரன் (26), முத்துகிருஷ்ணன்(29), திருவாடனை மணிகண்டன் (24)ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.


 பின்னர் ஜாமீனில் வெளிவந்த 5 பேரில் கணேசன் ஆலங்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரனையில் ஆஜராகாமல் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் இவ்வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது.p; கடந்த மாதம் ஆலங்குடியில் தேமுதிக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த்தும், அக்.7-ல் வெங்கடாசலத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இவ்வழக்கின் உண்மை நிலை மறைக்கப் படுவதாகவும், வழக்கு விசாரணையை கிடப்பில்>போட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தத குற்றவாளியை வடகாடு காவல் ஆய்வாளர் கரிகாற்சோழன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தலைமறைைவான கணேசனை தேடி தொண்டியில் தலைமறைவாக இருந்துவந்த கணேசனை தனிப்படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.<>தனிப்படை போலீஸார் கைது செய்ததால் கொலை வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கு மென எதிர்பார்க்கப்படுகிறது- இரா.பகத்சிங் nakkheeran.com 

கருத்துகள் இல்லை: