மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும்
கட்டாயப்படுத்த முடியாது : கமல் ஆவேசம்
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசினார்.’உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்காதுன்னா சாப்பிடாதீங்க. அதை ஏன் சாப்பிடக்கூடாது என்று மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் வேண்டுமானால் சாப்பிடாமல் இருங்க. நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் சாப்பிடுவதில்லை. என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவது இல்லை என்று முடிவெடுத்து விட்டேன்.
முடிந்தால் சின்ன மிருகங்களை சாப்பிடு. அதுவும் கிடைக்கலேன்னா என்ன கிடைக்குதோ அதை சாப்பிடு. அது கூட இல்லாமல எத்தனையோ பேரு இருக்குறான் இந்தியாவுல... அத கவனி. என்ன சாப்பிடலாமுன்னு மெனு போட்டுக்கொடுக்காத. சாப்பாடு போடு’’என்று ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர், ‘’மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆரோக்கியம் கருதியே நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். எதிர்காலத்தில் பூச்சிகள் உணவு மிகப்பெரிய வியாபாரமாகவும் ஆகலாம். சாப்பிட உணவே இல்லாமல் இங்கு பலர் இருக்கிறார்கள். யாருக்கும் மெனு கார்டு கொடுக்க வேண்டாம்’’ஆவேசமாக பேசினார் nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக