தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி,
பாடல் பாடிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இடதுசாரி பாடகரான கோவன்
என்கிற சிவதாஸிற்கு வழங்கப்பட்ட போலீஸ் காவலை, சென்னை உயர் நீதிமன்றம்
ரத்துசெய்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான
கடைகளை மூட வலியுறுத்தியும், மாநில முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக
விமர்சித்தும் தான் சார்ந்திருந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் மூலமாக
பாடல்களை அவர் பாடிவந்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சி உறையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
இதற்குப் பிறகு, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவல் கோரி நீதிமன்றத்திடம் காவல்துறை மனுத்தாக்கல் செய்தது. கோவனுக்கு இரண்டு நாள் போலீஸ் காவல் அளித்து சென்னைப் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து, கோவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கோவனை போலீஸ் விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது என அவரது வழக்கறிஞர் மில்டன் பிபிசியிடம் தெரிவித்தார். bbc.tamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக