தஞ்சாவூரில் உள்ள பால்சாமி மடத்தினுள் நுழைந்த நித்தியானந்தாவின்
சீடர்களை அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸார் ஓட ஓட அடித்து விரட்டிய
சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்போது, நித்யானந்தா சீடர்களை குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி
அனுப்பி வைத்த பின்னரும் சிறிது தூரம் சென்ற காரிலிருந்து 2 பெண்கள் உள்பட 4
சீடர்கள் இறங்கி மடத்தின் சுவரில் ஏறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது
அவர்களை கைது செய்து தஞ்சாவூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள பால்சாமி மடத்திற்கு
சொந்தமான வயல்வெளிகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. 5 ஏக்கர் பரப்பளவு
கொண்ட இந்த மடம், ராமகிருஷ்ண மடத்தின் கிளையாக உள்ளது. இந்த சாமியார் கும்பல் அரசியல்...கள்ளகடத்தல் மாபியாக்களை விட படுமோசம் ...சொத்துக்களை ஆக்கிரமிக்கிறார்கள்
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தினை நிர்வகித்து வந்த பால்சாமி சித்தர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மரணத்திற்கு பிறகு துருவர் என்ற சித்தர் தற்போது நிர்வகித்து வருகிறார்.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தினை நிர்வகித்து வந்த பால்சாமி சித்தர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவருடைய மரணத்திற்கு பிறகு துருவர் என்ற சித்தர் தற்போது நிர்வகித்து வருகிறார்.
பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 9
சீடர்கள் தஞ்சாவூருக்கு காரில் வந்தனர். தங்களுடைய காரில் இருந்தபடியே
அவர்கள் பால்சாமி மடத்தின் உள்ளே அத்துமீறி
நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது நித்தியானந்தா
சீடர்கள் இந்த மடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறியதோடு மட்டுமின்றி
அங்கிருந்தவர்களை வெளியேற வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள், இந்த மடம் பால்சாமி
மடத்துக்கு சொந்தமானது. எப்படி நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமாகும்
என்று கூறி மடத்தைவிட்டு நீங்கள் வெளியேறுங்கள் என்று நித்தியானந்தா
சீடர்களிடம் கூறினார்கள் ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.
இதனால் அங்கே இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு,
பொதுமக்களும், பால்சாமி மட ஆசிரமத்தின் நிர்வாகிகளும் சேர்ந்து
நித்தியானந்தாவின் சீடர்களை ஓட ஓட அடித்து விரட்டி அடித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார், அந்த சீடர்களை தஞ்சை மேற்கு
காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். ://tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக