டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமான பணம் பரிமாற்றப்பட்டதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்குகளும் அடங்கும். இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தத்துவை ஞாபகம் இருக்குங்களா ?அதாய்ங்க நம்ம ஜெயா சசி சுதாகரன் இளவரசிக்கு எல்லாம் சுட சுட ஜாமீன் கொடுத்தாரே ...அவரேதாய்ன்...இதுதாண்டா இப்போது நீதி...
இம்மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், இது தொடர்பான வழக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை ஒத்துக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக