பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கஜல் இசைக் கலைஞர் குலாம் அலி. கடந்த மாதம்
மும்பையில் நடைபெறவிருந்த இவரது இசை நிகழ்ச்சி சிவசேனாவினரின் எதிர்ப்பைத்
தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இது அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்தது.
இதையடுத்து, வேறு மாநிலங்களில் அவருக்கு இசை நிகழ்ச்சி நடத்தவும் அழைப்பு
விடுக்கப்பட்டது.
இந்நிலையில், குலாம் அலி இன்று அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் எனது
அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டேன். இந்தியாவில் சமீபகாலமாக
நடைபெறும் சம்பவங்கள் என்னை காயப்படுத்தியுள்ளது. எனவே இப்போதைக்கு நான்
இந்தியாவிற்கு வருவதாக இல்லை.
இந்திய ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி. நான் ஒரு பாடகன், நான் இசையைப் பற்றி பேசுபவன். மாறாக அரசியலை அல்ல.” என்று கூறியுள்ளார். இதையடுத்து டெல்லி மற்றும் லக்னோவில் நடக்கவிருந்த அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இவரது அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக