மும்பை மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் அட்மிட்டாக, டெல்லி பிரதமர் அலுவலகம்வரை பரபரப்பானது. நோ டென்ஷன் எனப் பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின ருக்கும் தகவல் சொன்னார் ஜெயேந்திரர். இருந்தாலும், அவர் அட் மிட்டாகியிருந்த ஹிந்துஜா மருத்துவமனை டாக்டர்களிடம் மேலிடம் விசாரித்தபோது, "ஜெயேந்திரருக்கு ஒன்றுமில்லை. எல்லா ஆர்கன்சும் நல்ல நிலையில் இருக்கு. சமீபத்தில் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக் கிறார்னு மட்டும் தெரிகிறது. மற்றபடி அவர் ஓ.கே.' என்று பதில் வந்துள்ளது. இரண்டு நாள் மருத்துவமனையில் தங்கியிருந்த ஜெயேந்திரர், தனது உடல்நலன் குறித்து அனைத்து மெடிக்கல் ரிப்போர்ட்டுகளையும் வாங்கிக்கொண்டு டிஸ்சார்ஜ் ஆனார். சென்னையிலேயே வசதிகள் இருக்கும்போது எதற்காக மும்பையில் அட்மிட்டாக வேண்டும் மடத்துக்கு வேண்டியவர்கள் பலரும் குழம்ப, இதே கேள்வியை காஞ்சி சங்கர மடத்தோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும் அரசின் உயரதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டோம். விரிவாகவே பேசினார் அந்த அதிகாரி. ""சங்கரமடம், அதன் நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பரந்து விரிந்து கிடக்கும் சொத்துக்கள், நிலபுலன்கள் என ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜெயேந்திரர் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது.
இதன் மீது சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு ஒரு கண். கடந்த ஒரு வருடமாக காய் நகர்த்திக் கிட்டிருக்காரு. இவருக்கு உடந்தையாக, மடத்தில் ஒரு கூட்டமே இயங்கிக்கொண் டிருக்கிறது. ஆனால், நிர்வாக மாற்றத் துக்கு ஜெயேந்திரர் ரெடியா இல்லை. "நிர்வாகத்தை மாத்தியமைக்க வேண் டிய அவசியம் என்ன? நான் நல்லாத் தானே இருக்கேன்? இங்கு உங்க ளுக்கு என்ன குறை இருக்கு?' என்று விஜயேந்திரர் தரப்பை திட்டி அனுப்பிட்டாரு..நல்லாவா இருக்கீங்க என்று மனதிற்குள் முனகிய விஜேயேந்திரர் தரப்பு, "பெரியாவாவிற்கு (ஜெயேந் திரர்) உடல்நலம் மோசமாகி விட்டது, புத்தி சுவாதீன மில்லாமல் இருக்கிறார், வயதாகிவிட்டது, முன்பு மாதிரி ஆக்டிவ்வாக இயங்க முடியவில்லை' என்றெல்லாம் மடத்தோடு தொடர்புடைய முக்கியமானவர்களிடமும், இந்தியாவில் உள்ள மற்ற சங்கரமடத்தின் தலைமை நிர்வாக பொறுப்புகளி லுள்ளவர்களிடமும் செய்தி யை பரப்பியது. இது பற்றி ஜெயேந்திரரிடமே சிலர் கேட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த அவர் தன்னிடமுள்ள மொத்த அதிகாரத்தையும் அபகரிக்க சதி நடப்பதை உணர்ந்து இதை முறியடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.."உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியத்தோடு இருக் கேன் என மெடிக்கல் ரீதி யாக நிரூபிப்போம்' என்ப தற்காகவே மும்பையிலுள்ள ஹிந்துஜா ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். சென்னையில் அட்மிட் டானால் மீடியாக்களின் கவனம் திரும்பும், மடத்துக்கு சொந்தமான மருத்துவ மனைகளில் அட்மிட் டானால் ஹெல்த் ரிப் போர்ட் பற்றி சந்தேகம் வரும் என்பதால்தான் மும்பை ஹிந்துஜா மருத் துவமனையில் அட்மிட் டானார். இந்தப் பயணத் திற்கு தனது ஸ்பெஷல் ஃப்ளைட்டை கொடுத்து உதவியது ஜாய்யான தங்க நிறுவனம்'' என்று ரக சியங்களை விவரித்தார் அந்த அதிகாரி.ஜெயேந்திரரை சுற்றி நடக்கும் இந்த அதிகார போட்டி விவகாரம் குறித்து பல்வேறு தரப்பில் நாம் மேலும் விசாரித்தபோது, பிரதமர் மோடியின் இண்டெலக்ச்சுவல்ஸ் குரூப் மற்றும் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருக்கும் தமிழக வி.ஐ.பி. நம்மிடம், ""ஹிந்துஜா மருத்துவமனையில் சங்கராச் சாரியார் அட்மிட் ஆனதை அறிந்து மோடி உள்பட பலரும் பதறிட்டாங்க. ஜெயேந்திரரிடம் அவர்கள் பேசியபோது, "நல்லாயிருக்கேன். நாளை மறுநாள் ஹரித்துவார் வர்றேன். அங்கு வாங்கோ பேசிக்கலாம்' என்று கூறியிருக்கிறார். டிஸ்சார்ஜ் ஆனதும் மும்பையிலுள்ள சங்கர மடத்துக்குச் சென்று அங்கு பக்தர்களை சந்தித்து உரையாடினார். மும்பை மக்களும் அவரை சந்தித்துவிட்டுப் போனார்கள். மறுநாள் ஹரித்துவார் செல்ல, அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலர் சந்தித்து விவாதித்தனர். அப்போது, தன்னிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க சதி நடப்பதையும், ஆஸ்பிட்டலில் அட்மிட்டானதன் பின்னணியையும் ஜெயேந்திரர் விவரிக்க, கவலைப்படாதீர்கள் என தைரியப்படுத்தினர் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள்.
தன்னிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற ஜெ.வின் உதவியை விஜயேந்திரர் நாடலாம் என்ற சந்தேகத்தையும் ஜெயேந்திரர் வெளிப்படுத்தியுள்ளார். மோடியிடம் தகவல் போக, அவரிடமும் ஜெயேந்திரர் பேசியிருக்கிறார். அதன் ஒருகட்டமாக பிரதமர் தரப்பிலிருந்து விஜயேந்திரரை தொடர்புகொண்டு, அநாவசிய குறுக்கீடுகள் வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா தரப்பையும் மோடி தரப்பில் தொடர்பு கொண்டு மடம் தொடர்பாக பொதுவான சில விசயங்களை பகிர்ந்துகொண்டிருக் கிறார்கள். ஜெயேந்திரர் பயந்ததுபோலவே ஜெ.வின் உதவியை விஜயேந்திரர் நாடியிருக் கிறார். பாசிட்டிவ்வான பதில் வரவில்லை என்கிறார்கள் மடத்தின் நிலவரம் அறிந்த பல தரப்பினரும். இது குறித்து கருத்தறிய சங்கர மடத்தை நாம் பல முறை தொடர்புகொண்டும் ஃபோன் லைனை யாருமே அட்டென்ட் பண்ணவில்லை.தமிழகத்திலுள்ள இந்து மத இயக்கங்களிடம் நாம் தொடர்புகொண்டு விசாரித்த போதும், "சங்கரமடத்தில் அதிகார போட்டி நடந்து வருவது உண்மைதான்' என் கிற தகவல்களே கிடைக்கின்றன..
-சஞ்சய் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக