சனி, 3 அக்டோபர், 2015

சமந்தாவை சிக்கவச்ச தெலுங்கு தயாரிப்பாளர்கள்...


சிம்புவின் "இது நம்ம ஆளு'’பட விவகாரத்தில் ‘"கதைக்கு தேவையில்லாத குத்துப்பாட்டுக்கு ஆட விரும்பாததையும்,  தனக்கு வரவேண்டிய 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி தேவையில்லை'’என்றும் நயன்தாரா சொன்னதாக தகவல்கள் வந்தன. பாக்கிச் சம்பளமே 50 லகரம் என்றால்... மொத்தச் சம்பளம் எவ்வளவு? என்பதை நோட்டம்விட்டதாம் வருமான வரித்துறை. இன்கம்டாக்ஸில் வருட வருமானமாக நயன் குறிப்பிட்டு வந்த கணக்கு 60 லட்ச ரூபாய்தான்.கேரளாவில் திருவல்லா புஷ்பகிரி அருகே கோடியாட்டு எனும் இடத்தில் நயனுக்கு சொந்தமான பூர்வீக வீடு உள்ளது. அத்துடன், தேவாரா எனும் இடத்தில் "வொய்ட் வாட்டர்' எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார். அந்தக் குடியிருப்பில் கீழ் மற்றும் மேல் தளத்தில் நயனுக்கு வீடு உண்டு. கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
மலையாளப் படமான "பாஸ்கர் தி ராஸ்கல்'’ படம் நல்ல வசூலைக் கண்டதால் மீண்டும் மம்முட்டி யுடன் ஒரு படம் நடித்து வரும் நயன் இதற்காக கேரளாவில் இருக்கிறார்.

இந்த நேரத்தில்தான் நயனின் இரண்டு வீடுகளிலும் ரெய்டு நடந்திருக்கிறது. கோட்டயம் வருமான வரித்துறை டெபுடி கமிஷனர் ராஜேஷ் தலைமையில் ஒரு டீம் வொய்ட் வாட்டர் குடியிருப்புக்கும், இன்னொரு டீம் திருவல்லா வீட்டுக்கும் போனது. கார் டிரைவர் மூலம் திருவல்லா வீட்டுச் சாவியை கொடுத் தனுப்பிய நயன், வொய்ட் வாட்டர் வீட்டில் அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டி ருக்கிறார்
எவ்வித பதட்டமு மின்றி. தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழித் திரைப்படங் களிலும் பிஸியாக இருக்கும் சமந்தா, ஒரு படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்கிறார்கள். தமிழுக்கு முன்னுரிமை கொடுப்ப தால், தெலுங்கு தயாரிப்பாளர் களுக்கு சமந்தா மீது வருத்தம். முன்பு அனுஷ்கா இப்படி தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த தால் அவரை ஐ.டி.யிடம் போட்டுக் கொடுத்தார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள்.
இப்போது அதேமாதிரி சமந்தா வையும் போட்டுக் கொடுத்து விட்டார்களாம்."சூர்யாவுடன் நடித்து வரும் "24'’படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை தெலுங்கு பிரபலம் ஒருவருடன் இணைந்து 20 கோடிக்கு வாங்கியுள்ளார்' சமந்தா... என தகவல் கிளம்பியது. அதுமட்டு மின்றி ஹைதராபாத் விமான நிலைய ஏரியாவிலும், சென்னை யிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார் சமந்தா எனவும் தகவல் கிளம்பி, ஐ.டி. ஆபீஸர்ஸின் காதுகளை எட்டியிருந்தது.
விளம்பரப் படங்களிலும் பெரிய சம்பளத் தில் நடித்து வருகிறார்.இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் சமந்தாவின் ஹைதராபாத் வீட்டிலும், சென்னை பல்லாவரம் வீட்டி லும் ரெய்டு நடந்தது. ரெய்டு நடந்தபோது "24'’படத்தின் ஷூட்டிங்கிற்காக போலந்து நாட்டில் இருந்தார் சமந்தா.சமந்தாவின் ஹைதராபாத் வீட்டில் சமந்தாவின் மேனேஜ ரிடம் ஒருமணி நேரம் விசாரணை நடத்தினர்
அதிகாரி கள். சென்னை வீட்டில் ரெய்டு நடந்தபோது "அவளோட வருமானம் எவ்வளவுங்கிற விஷயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதை அவளேதான் பார்த்துக்குறா. நாங்க ரொம்ப சிம்பிளான லைஃப் ஸ்டைல்ல தான் வாழ்றோம்'’என அதி காரிகளிடம் சொல்லியிருக்கிறார் சமந்தாவின் தந்தை ஜோஸப் பிரபு.
சமந்தாவின் வீட்டுக்குள் நுழைந்த மீடியாவை சத்தம் போட்டார் சமந்தாவின் அம்மா. அப்போது சமந்தாவின் சகோதரர் கோபத்தில் கை களால் மீடியா ஆட்களை தள்ளிவிட்டார். இதையடுத்து மீடியாவை சமாதானப்படுத்திய சமந்தாவின் அப்பா, "என் மகள் உரிய முறையில் வருமானவரிக் கணக்கை காட்டியே வருகிறாள். கருப்புப் பணமெல்லாம் அவ ளிடமோ, எங்களிடமோ இல்லை' என மீடியாவிடம் விளக்கமளித் தார். "புலி'க்கு பொறி வைத்து... அந்தப் பொறியில் கிளிகளையும் சிக்க வைத்திருக்கிறார்கள் என்கிறது கோலிவுட்.விகடன்.com

கருத்துகள் இல்லை: