வியாழன், 1 அக்டோபர், 2015

நோயில்லாத வாழ்வுக்கு உதவும் பாக்டீரியாவை கண்டு பிடித்த ரஷ்ய விஞ்ஞானி

சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் ‘பேசில்லஸ் எஃப்’ என்ற பாக்டீரியாவை, பழம், எலி போன்றவற்றில் செலுத்தி சோதித்தனர். இதன் மூலம் அவை நோய்களால் பாதிக்கப்படாமல், செழுமையாக இருப்பது தெரியவந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் தனது உடலிலும் இந்த பாக்டீரியாவை செலுத்திக் கொண்டுள்ளார் மாஸ்கோ நகரில் உள்ள ஜியோகிரியாலஜி துறைத் தலைவராக உள்ள அனடோலி ப்ரோவ்ச்கோவ்(58). அனடோலி தனது உடலில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் செலுத்திக் கொண்டுள்ளார். இது உடலில் செலுத்தப்பட்ட பின்னர் சிறு, சிறு ஜுரம் போன்ற பிரச்சனைகள்கூட ஏற்படுவதில்லை என்றும், இதன்மூலம் நீடித்த வாழ்க்கைக்கான ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இவர் கூறி வருகிறார்.
எனினும், இந்த பாக்டீரியா எப்படி நீடித்த வாழ்க்கைக்கு உதவுகிறது? என இதுவரை தெரியவில்லை. ஆகவே, இதனை உடனடியாக மனிதர்களுக்கு பயன்படுத்த இயலாது என அனடோலி தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: