வெள்ளி, 2 அக்டோபர், 2015

வைகோவின் கூட்டணியிலிருந்து வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி

வைகோ ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சி வெளியேறி விட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தலைமையில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் என மொத்தம் ஆறு கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக உருவாகின. இந்த கூட்டணியே அதிமுக., திமுக.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அணியில் இருந்து தமிழருவி மணியன் வெளியேறினார். இதனால், அந்தக் கூட்டணியில் ஐந்து கட்சிகள் மட்டுமே இருந்தது.  தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. இது குறித்து கருத்துக்கேட்ட போது "மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குப் போராடத்தான் இந்த இயக்கத்தில் இணைந்தோமே தவிர இதையே ஒரு தேர்தல் அணியாக மாற்றுவதில் உடன்பாடு இல்லை” என்று மனித நேய கட்சித்  தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் , தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் திமுக. வுடன் கூட்டணி கிடையாது என்று அந்த கட்சி முடிவு செய்தது.
இது பற்றி பேட்டியளித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 2014 தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுடன் திமுக.வினர் ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. எனவே திமுக வோடு கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
அதே நேரத்தில் தமிழக முதல்வரான ஜெயலலிதாவை அவர் பாராட்டிபேசத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடந்த முடிந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்தது பற்றி, அவர் ஜெயலலிதாவை மிகவும் புகழ்ந்து பேசினார்.
இதன்மூலம் வருகிற சட்டசபை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி அதிமுக.வுடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தன் சொந்த கட்சியான மதிமுக விலிருந்து பலர் வெளியேறி விட்ட நிலையில், தான் புதிதாக அமைத்த கூட்டணி கட்சியையும், வைகோவால் தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.webdunia.com

கருத்துகள் இல்லை: