சனி, 3 அக்டோபர், 2015

Laptop காமிரா முன்பாக D.S.P. விஷ்ணுப்பிரியா தற்கொலை? அவரின் கடிதத்தின் மேலும் 2 பக்கம் வெளியாகி ....

திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், காவல்துறையால் மறைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன. அவரது தற்கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஷ்ணுப்பிரியா எழுதியதாக 9 பக்கங்கள் கொண்ட கடிதத்தினை காவல்துறையினர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர் எழுதிய கடிதத்தில் மேலும் பல பக்கங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக விஷ்ணுப்பிரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் கடிதத்தில் மேலும் இரண்டு பக்கங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தான் தற்கொலை செய்யும் வீடியோ தன் மடிக்கனிணியில் இருக்கும் என்றும், அதனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: