சனி, 1 நவம்பர், 2014

சகாயம் விசாரணைக்கு தகவல் சேகரிக்க சமுக ஆர்வலர்கள் குழு அமைக்கபடுகிறது! தமிழக அரசு sabotage பண்ணுகிறதா?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கிரானைட் மற்றும் கனிமவளம் கொள்ளை குறித்து விசாரிக்க உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, தேவையான ஆதாரங்களை சேகரித்து வழங்க, சமூக ஆர்வலர்கள் ஒன்று இணைந்து, சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிமவளம் முறைகேடு குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமித்தது. தனக்கு உதவியாளர்களை நியமிக்கும்படி, அரசுக்கு, சகாயம் கடிதம் அனுப்பினார். அரசு கண்டுகொள்ளவில்லை.
நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்ததுடன், சகாயத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும்படி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சகாயம் விசாரணைக்கு, அரசு தேவையான
உதவிகளை வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள, சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, சகாயத்திற்கு உதவ முடிவு செய்துள்ளனர். இதற்காக, சகாயம் ஆதரவு அமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பு குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:
சகாயம் ஆய்வுக் குழுவிற்கு, தேவையான விவரங்களை பெற்றுத்தர, தமிழக முழுவதும் உள்ள, சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து பேசி, ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம்.ஒவ்வொரு மாவட்டத்திலும், லஞ்ச ஒழிப்பு செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், ஆர்வமுள்ள தனிநபர், ஆகியோரைக் கொண்டு, ஒருங்கிணைப்பு குழு அமைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: