திங்கள், 27 அக்டோபர், 2014

அரசியல்வாதிகளின் பெயர்கள் SWISS கறுப்புபண பட்டியலில் இல்லையாம் !

 சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ளவர்கள் பட்டியலில் பலர் பெயர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வர்த்தக ரீதியிலான 3 பேர் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. காங்., மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் பெயர்கள் , பெரும்புள்ளிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொழிலதிபர்கள் 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் போனது என்பது தான் உண்மை. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின்னர் கறுப்பு பணம் மீட்கப்படும். வெளிநாடுகளில் இந்தியா பேச்சு நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி மொழி அளிக்கப்பட்டது.

பி.ஜே.பி அரசு அந்த பெயர்களை மக்களிடம் தெரிவிக்க வில்லை...... ஏன் தெரியுமா ? அதில் அரசியல் பிரமுகர்கள் பெயர் பெரிய அளவில் எதுவும் இல்லை. அதிகம் தொழிலதிபர்கள் தான் .. அவர்களின் தயவு தேர்தல் நிதி என்ற பெயரில் கட்சிக்கு தேவை.., அதனால் தான் அவர்களிடம் விளக்கம் கேட்டு முறைபடுத்த கெஞ்சி கொண்டிருகிறது ( இது இரு பி.ஜே.பி , காங்கிரஸ் இரு கட்சிக்கும் பொருந்தும் ) மேலும் , காங்கிரஸ் , சமாஜ்வாடி , மம்தா ,தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினர் இங்கு முதலீடு செய்தது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி பி.ஜே.பி அரசியல் செய்ய முடியும் ?.... அப்படி மடியில் கனமில்லை எனில் 600 பேரின் பெயரை அறிவிக்க கடந்த 3 மாதமாக தயங்குவது ஏன் ?.. மகாராஷ்ட்ராவில் தேர்தலுக்காக 3,000 கோடி ருபாய் பி.ஜே.பி செலவு செய்திருக்கிறது , எப்படி வந்தது ? யார் கட்சி நிதி கொடுத்தார்கள் , விமானத்தில் பறந்து பறந்து பிரசாரம் செய்தீர்களே ?
சுப்ரீம் கோர்ட்டில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தியதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இந்த பட்டியலை வெளியிட்டால் காங்கிரசுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார். இதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது ஒன்றும் எங்களுக்கு தலைக்குனிவை தராது என்றார். இது தனிப்பட்ட மனித ஒழுக்க விவகாரம், நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்டியலில் டாபர் முன்னாள் சேர்மன் பிரதீப் பர்மன்- குஜராத் ராஜ்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா , கோவாவில் சுரங்க தொழில் நடத்தும் அதிபர் ராதா திம்லூ ஆகியார் பெயர் இடம் பெற்றுள்ளது. span> 
டாபர் நிறுவனம் மறுப்பு : இது தொடர்பாக டாபர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது; சேர்மன் பர்மன் வெளிநாடு இந்தியராக வாழ்ந்த காலத்தில் அவர் வெளிநாடுகளில் பணம் போட்டிருந்தார். இது சட்டப்பூர்வமானதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. முறையான வரி செலுத்தியதன் ஆதாரங்கள் உள்ளது. பர்மன் மிக பெரிய மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தவறுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது என்றும் , சட்டப்பூர்வமாக அனைத்து விஷயங்களையும் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
சுவிஸ்சில் கணக்கு இல்லை;லோதியா குஜராத் ராஜ்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் சிமன்லால் லோதியா நிருபர்களிடம் கூறுகையில், எனது பெயரில் சுவிஸ்சில் எந்தவொரு கணக்கும் இல்லை. மத்திய அரசின் பட்டியலில் எனது பெயர் இருந்தது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எனது ஆதாரங்கள், ஆவணங்கள் வழங்கி, கோர்ட்டிலும் நிரூபிப்பேன் என்றார்.<பிரசாந்பூஷன் கருத்து: இன்று வெளியிடப்பட்ட பட்டியல் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஏன் மற்ற பெயர்களை மத்திய அரசு மறைக்கிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக ஒன்றுமில்லை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியலையே இப்போது பா.ஜ., ஆட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் புதிதாக ஒன்றுமில்லை என்றும் காங்கிரசார் குறை கூறியிருக்கின்றனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை: