செவ்வாய், 28 அக்டோபர், 2014

விஜயகாந்த் : ஜெயலலிதா மக்களின் முதல்வர் அல்ல !ஊழலில் முதல்வர் குற்றங்களில் முதல்வர் !

சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்து பேசுகையில், ஜெ., மக்களின் முதல்வர் என்று கூறுகிறார்கள் அவர் ஊழலில்தான் முதல்வர், குற்றவாளியில் தான் முதல்வர் என்று கடுமையாக சாடினார்.
தமிழகத்தின் சமீபத்திய பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தே.மு.தி.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், மக்கள் தலையில் சுமையை ஏற்ற வேண்டாம். பால் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். விளம்பரம் வராது:
ஜெ.,வை திட்டினால் பத்திரிகையில் எந்த வொரு அறிக்கையும் வர மாட்டேங்குது. விஜயகாந்த் கூறினார் என்று தான் இருக்கும். ஆனால் நான் திட்டியது இருக்காது. தவறாக போட்டால் விளம்பரம் வராது. டி.வி.,க்கள் மற்றும் மீடியாக்கள்எதுவும் உண்மையை சொல்வதில்லை. ஏதோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன். வொர்க்லோடு நிறைய இருப்பதால் மறந்து போகுது. யாரும் நடிக்க கூடாது. நடிப்பு எல்லாம் எனக்கு பிடிக்காது. அம்மா தண்ணீர் கடை, அம்மா இட்லி என்றெல்லாம் இருக்குது. இப்போது பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் சோடா என்று வாட்ஸ் அப்பில் போட்டு இளைஞர்கள் கலக்குகின்றனர்.


மக்களுக்காக என்ன உழைத்தீர்கள் ? எல்லா இடத்திலும் ஜெ., போட்டோ காட்டுகின்றனர். எல்லோரும் பயந்து போடுகிறார்கள். ஏன் பயப்படுகிறீர்கள் ? எங்க அம்மா , எங்க அம்மா என்று பயப்படுவதை பார்க்க முடிகிறது. எல்லோரும், அம்மா, அம்மா என்று பயப்படுகிறார்கள். என்ன கழுத்துக்கா கத்தி வரப்போகுது. யாரும் பயப்படக்கூடாது. ஆறிலும், சாவு, நூறிலும் சாவு, அச்சம் என்பது மடமையடா, என்று பாடல் உள்ளது. வாழ்தவர் கோடி , மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார் ? என்று பாடினார்களே, ஆனால் மக்கள் மனதில் நிற்பவர் மக்களே ! தலைவர் அண்ணாத்துரை ,மற்றும் காமராஜரை மக்கள் முதல்வர் என்ற அழைக்கலாம். ஆனால் உங்களை மக்கள் முதல்வர் என்று உங்கள் டி.வி.,யில் சொல்கின்றனர். ஊழலில் முதல்வர் நீங்கள், குற்றவாளியில் முதல்வர் நீங்கள், ஜெ., மக்களின் முதல்வர் அல்ல. உங்களை குற்றவாளி என்றே சொல்லியாச்சு, மக்கள் முதல்வர் என்று எப்படி சொல்ல முடியும். மக்களுக்காக உழைத்தால் தான் மக்கள் முதல்வர். நீங்க என்ன உழைத்தீர்கள். மக்களின் நலனை கருதாத நீங்கள் மக்கள் முதல்வர் ஆக முடியாது.

அதிகாரி சகாயம் : மின் கட்டணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம். பத்திரிகைகள், டி.வி.,க்கள் மக்களுக்காக பேச வேண்டும். மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள். மணல், குவாரி ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதிகாரி சகாயம் இன்னும் விசாரணையை துவக்க அனுமதிக்கவில்லை. இவரை ஏன் இன்னும் அனுப்பவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்கின்றனர், தர்மம் என்பது மக்கள் தான், மக்களே ஜெயிப்பார்கள். மக்கள் முதல்வர் என்கிற ஒரு பெண் , பெண்களின் முக்கிய தேவையான பால் விலையை உயர்த்தலாமா?

ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் : ஆடு மாடு கொடுத்தோம் என்று கூறும் ஜெ., ஆதரவு டி.வி., பால் விலை உயர்த்தியதை இருட்டிப்பு செய்தது ஏன் ? ஆடு , மாடுகள், கம்ப்யூட்டர் எல்லாம் மக்களாகிய உங்கள் வரிப்பணம் தான். இந்த அம்மா சொந்த காசில் இருந்து கொடுக்க வேண்டியது தானே ! விஜயகாந்த் எப்போதும் எந்த முடிவும் எடுப்பேன். பொறுமையாக இருக்க வேண்டும். உப்பை தின்றவன் தண்ணி குடிக்கனும். பால் விலை உயர்வை குறைத்தே தீர வேண்டும். ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் இருந்தார்கள். குற்றம் உள்ள நெஞ்சு குறு, குறுக்குது. இதனால் தான் ஜெ., யாரையும் பார்க்க மாட்டார்கள். எனக்கு மடியில் கனம் இல்லை.

நான் எழுதி வைத்து பேசுவதில்லை. எனது மனதில் பட்டதை பேசுகிறேன். எழுதி வைத்து பேசினால் ஒரு ஆர்டர் இருக்கும். முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு பால் விலை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றனர். இன்னும் மின்வெட்டு நீடிக்கத்தான் செய்கிறது. ஓ.பி.எஸ். அவர்களே பால் விலையை குறையுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: