மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்
என்று கூறப்படும் நிலையில், அவரை சென்று சந்தித்த பிரதாப் வைதிக்கை, தேச
நலனை காத்திட கைது செய்ய வேண்டும் என்று அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள்
அமளியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவையில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்,
பயங்கரவாதிக்கும் பிரதாப் வைதிக்கும் நடந்த சந்திப்பிற்கு அரசுக்கு தொடர்பு
உள்ளதா? என்று விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி மறுத்த சபாநாயகர் ஹமீத் அன்சாரி, கேள்வி
நேரத்தில் இதற்கான விவாதத்தை தொடர முடியாது என்று தெரிவித்து அவையை 15
நிமிடத்திற்கு ஒத்திவைத்தார்.
பின்னர், மீண்டும் அவை துவங்கியவுடன், கேள்வி நேரத்தின்போது பேசிய
காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் ஷர்மா மீண்டும் இந்த பிரச்சினையை கிளப்பி,
"பயங்கரவாதி ஹபீஸ் சையீத் இந்தியா மட்டுமே தேடப்படும் நபர் அல்ல, உலக
அளவில் மிகவும் அச்சுறுத்தலானவர் . அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்தது
குறித்து அரசு விளக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய உள்துறை அமைச்சர் அருண் ஜேட்லி,
"ஹபீஸ் சையீத் ஒரு பயங்கரவாதி என்பதில் அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும்
கிடையாது. அவரால் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால்
பத்திரிகையாளர் பிரதாப் வைதிக்கும் ஹபீஸ் சையீதுக்குமான சந்திப்புக்கும்
அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது தொலைதூர அளவில் கூட எந்த
சம்பந்தமும் இல்லை. பயங்கரவாதி ஹபீஸ் சையீதை சந்திக்க, அரசு யாரையும்
நியமிக்கவோ அல்லது அதற்கான ஒப்புதலையோ அளிக்கவில்லை" என்றார்.
tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக