வியாழன், 17 ஜூலை, 2014

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் அழைக்கிறார் ! குதிரை பேரம் படிந்தது ?

டெல்லி: பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் நஜீப் ஜங் அழைப்பு விடுக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 70 எம்.எல்.ஏக்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களைக் கைப்பற்றியது. 28 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களைப் பெற்றது. அதிக இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றிய போதும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானார். டெல்லியில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கிறார் ஆளுநர்? ஆம் ஆத்மி கொந்தளிப்பு! ஆனால் அந்த ஆட்சியும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி ராஜினாமா செய்தது. இதனால் டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் திடீரென பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பதற்கான முஸ்தீபுகளில் குதித்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை ரூ20 கோடிக்கு விலைக்கு வாங்கிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் நஜீப் எந்த நேரத்திலும் அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆளுநர் இப்படி ஒரு அழைப்பு விடுக்கும் முடிவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
/tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: