சென்னையில், நாளை (19ம் தேதி) நடைபெறவுள்ள சமூக நீதி மாநாட்டின் மேடையில்,
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் 'கை'
கோர்க்க இருப்பதால், மீண்டும் தி.மு.க., - காங்கிரஸ் உறவு
புதுப்பிப்பதற்கு, அச்சாரமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும்,
கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டதில், இரு கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தேர்தலுக்கு முன், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு, தென் மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது என்றும், தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டாம் எனவும், இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிஷப் எஸ்றா சற்குணம், தி.மு.க.,வில் உள்ள முன்னணி தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். காங்கிரசுடன் கூட்டணி வைக்க கூடாது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிடிவாதமாக இருந்ததால், கூட்டணி உருவாகவில்லை.
காங்கிரஸில் எத்தனை மத்திய அமைச்சர்கள் ? எத்தனை முறை அமைச்சராக இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட முடியாத நிலை. EVKS இளங்கோவன் வாய் காலவாயை விட பெரியது. அவர் வாழும் வீதியில் கூட அவரால் அதிக வோட்டு வாங்க இயலவில்லை.கொஞ்சம் சொந்த செல்வாக்கு வைத்திருந்த திருநாவுக்கரசு கூட பன்னியுடன் சேர்ந்த கன்றுகுட்டி ஆகிவிட்டார். வாக்கில் உறுதி - பேச்சில் நாணயம் - மக்களுக்கு பிரச்சினை என்றால் தெருவுக்கு வந்து போராடுதல்- சாமான்யன் சாதாரணமாக தொடர்பு கொள்ளும் வண்ணம் எளிமை- இவைகள் இல்லாதனால் தான் DMK ஆட்சிக்கு வந்தது. நீங்கள் நேரு குடும்பத்திற்கு சேவகம் செய்வதை நிறுத்தும் வரை இவை நடக்கப்போவதில்லை. ஒரு விஜயகாந்திற்கு உள்ள தன்னம்பிக்கை கூட உங்களுக்கு இல்லை- நீங்கள் செய்த மிக பெரிய தவறு சைக்கிள் ஐ கைவிட்டது தான். தமிழக காங்கிரஸ் அப்படி ஒன்றும் கோமாளி கட்சி அல்ல. கொஞ்சம் கோஷ்டி கானத்தை நிறுத்தி விட்டு நாட்டை பற்றி யோசியுங்கள். இன்றைய தேதியில் ஒருவர் கூட காமராசரின் வாரிசு இல்லை.

இதே கருத்தை கட்சியின் மாவட்ட செயலர்களும் ஆமோதித்து, காங்கிரஸ் இல்லாமலேயே தேர்தலை சந்தித்தனர் தி.மு.க.,வினர். ஆனால், தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருக்கலாம் என, தி.மு.க., மாவட்ட செயலர்களும், தோல்வி அடைந்த தி.மு.க., வேட்பாளர்களும், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளன்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காமராஜரின் ஆலோசனையை கேட்டு தான், தி.மு.க., ஆட்சியை நடத்தினேன் என, குறிப்பிட்டிருந்தார். தனக்கும், காமராஜருக்கும் இருந்த நெருக்கம் குறித்தும், உள்ளம் நெகிழ்ந்து அதில் குறிப்பிட்டிருந்தார். இது, தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், காமராஜர் சிலையை, சத்தியமூர்த்தி பவனில் திறக்கும்போது, பொருளாளர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம், காங்கிரசார் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். சத்தியமூர்த்தி பவனுக்கு ஏற்கனவே கருணாநிதி, கனிமொழி ஆகியோர் வந்துள்ளனர். ஆனால், ஸ்டாலின் ஒரு முறைகூட வரவில்லை. எனவே, ஸ்டாலினை, காமராஜர் சிலை திறப்பு விழாவிற்கு அழைக்க வேண்டும் என, காங்கிரசார் விரும்புகின்றனர். இதற்கிடையில், வரும் 19ம் தேதி, எஸ்றா சற்குணத்தின் 76வது பிறந்தநாள் விழாவும், இறை நன்றி வழிபாடும், ஒடுக்கப்பட்டோர் தின விழாவும் இந்திய சமூக நீதி இயக்கத்தின் 15ம் ஆண்டு விழாவும் சென்னையில், முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ளது. இவ்விழாவை ஒட்டி, சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது, அதில் ஸ்டாலின் பங்கேற்று, சிறுவர்களுக்கு கல்வி உதவி தொகை, சமூக நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இம்மாநாட்டில், காங்கிரஸ் சார்பில் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், ஜே.எம்.ஆருண், வசந்த குமார் மற்றும் தி.மு.க., சார்பில் கனிமொழி, முன்னாள் எம்.பி., ஜெயசீலன், இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். விழாவில், ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்பதால், தி.மு.க., - காங்கிரஸ் உறவு மீண்டும் மலருவதற்கு வாய்ப்பிருப்பதாக, இரு கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக கூறுகின்றனர்.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக