திங்கள், 14 ஜூலை, 2014

ஸ்டாலினின் உப்பு சப்பில்லாத பேச்சு ! கலைஞர் வருத்தம் அல்லது கண்டனம் ?

சென்னை மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தி, கவர்னர் அலுவலகம் நோக்கி, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடந்தது.'இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில், உணர்ச்சிகரமாக பேசவில்லை' என, பேரணியை தலைமை ஏற்று நடத்திய, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கட்சித் தலைவர் கருணாநிதி கண்டித்து உள்ளார். இதுபற்றி, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: 'மவுலிவாக்கத்தில், 11 கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதில், பல தவறுகள் நடந்திருக்கின்றன. அதனால், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, தி.மு.க., தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை ஏற்காத தமிழக அரசோ, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இருப்பினும்,சி.பி.ஐ., விசாரணை கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த, 12ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை, தி.மு.க., நடத்தியது.ஏராளமான தொண்டர்கள், அந்த பேரணியில் பங்கேற்றனர். ஆனால், பேரணியை துவக்கி வைத்து, உரையாற்றிய கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். அந்த பேச்சும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு இல்லை.
கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக ஆட்சியின் அவலத்தினை, தொண்டர்கள் மத்தியில், விரிவாக எடுத்துரைத்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால், தேர்தல் தோல்வியால் உற்சாகம் இழந்திருக்கும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருப்பர்.அந்த வாய்ப்பை ஸ்டாலின் Advertisement தவற விட்டு விட்டார். இதை ஸ்டாலினிடம் சொல்லிய கருணாநிதி, தன் வருத்தத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: