புதன், 16 ஜூலை, 2014

அதிகாரி அசோக் கெம்கா ! மத்திய அரசு பணிக்கு மாற்றம் !

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அரியானா காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வேட்டையாடப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 49, நேற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.கடந்த, 1991ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக தேர்ச்சி பெற்ற அசோக் கெம்கா, பல மாநிலங்களில் பணியாற்றிய பிறகு, சில ஆண்டுகளுக்கு முன், அரியானா மாநில பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள, காங்கிரசை சேர்ந்த முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.குறிப்பாக, காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கும், டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பையும், அது தொடர்பான நில முறைகேடுகளையும் அம்பலப்படுத்தினார். இதனால், அரியானா அரசின் கோபத்திற்கு ஆளான கெம்கா மீது, வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த அதிகாரியான அவரை, சாதாரண பொறுப்புகளில் நியமித்து, மாநில அரசு அவமதித்தது.  கெம்காவை வெறும் காங்கிரச பழிவாங்கும் குறடாக யூஸ் பண்ணுவார்கள் ? குறிப்பாக ஹரியானா அரசு மற்றும் சோனியா குடும்பத்தையும் , ராபர்ட் வத்ராவையும் பழிவாங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன், அதையும் தாண்டி இவரை சுதந்திரமாக செயல்பட விடுவார்களா என்பது சந்தேகமே....


இந்நிலையில், 2010ல், மத்திய அரசு பணிக்கு மாறுதல் கேட்டு, கெம்கா விண்ணப்பம் செய்தார். அந்த காலகட்டத்தில் மத்தியிலும் காங்கிரஸ் தலைமை யிலான அரசே இருந்ததால், அவரின் கோரிக்கை நிறைவேறவில்லை.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இவரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு பணிக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்காவை மாற்றி உள்ளது. இதனால் அவர் நிம்மதி அடைந்து உள்ளார்.அவரின், 21 ஆண்டு கால அரசு பணியில், 45 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: