வியாழன், 5 ஜூன், 2014

பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா ! எல்லாம் சொத்து குவிப்பு மகிமை !

சென்னை: டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பாஜக தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து சந்தித்து வந்தது அரசியல் அரங்கில் புதிய பாதைக்கு வித்திட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லாமல் இருந்த வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். ஆனால் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. பாஜகவை நெருங்கும் ஜெயலலிதா: டெல்லி அரசியலில் புதிய திருப்பம் இந்த நிலையில் பெங்களூருவில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு அரசியல் ரீதியாக பெரும் குடைச்சலாக இருப்பதால் பாஜக தயவை ஜெயலலிதா நாடுவதாக கூறப்படுகின்றது. பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவின் வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். அவர் தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் ரவிசங்கர் பிரசாத் ஜெயலலிதாவை அவர் தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்திலத்திற்கே வந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அதே போல மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவருடைய அலுவலகம் சென்று ஜெயலலிதா சந்தித்தார். கடந்த முறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருமுறை கூட ஜெயலலிதா சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் முழு விவரமும் ரவிசங்கர் பிரசாத்துக்கு தெரியுமாம். ஆனால் ரவி சங்கர் பிரசாத்தே தன்னை நேரில் வந்து சந்தித்ததால் உள்ளம் நெகிழ்ந்து போன ஜெயலலிதா தனக்கு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து சட்டப்படி விடுதலை கிடைக்கும் என நம்புகின்றாராம். இப்படி மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவிடன் கரிசனமாக இருப்பதால் பாஜகவுடன் மிக இணக்கமான உறவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளதாக அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: