செவ்வாய், 3 ஜூன், 2014

பனிரெண்டு வேடத்தில் வித்தியா பாலன் அலப்பறை !

கஜினி, ரமணா போன்ற கோலிவுட் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றதையடுத்து தமிழ் படங்கள் மீது பாலிவுட் திரை யுலகினரின் கவனம் திரும்பியதுடன் சூது கவ்வும், பீட்சா போன்ற வித்தியாசமான கான்செப்ட் தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதேபோல் தற்போது விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பாபி ஜாஸுஸ் என்ற படத்தில் நடிகை வித்யாபாலன் 12 கெட்அப் அணிந்து நடிக்கிறார். இதற்காக இவருக்கு 100 வித கெட்அப் அணிந்து மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் 12 வேடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது பாலிவுட்டில் உருமாறி நடிக்கும் வேடங்கள் புதிய டிரெண்ட் ஆகி வருகிறது.

கோலிவுட் கெட்டப் மாற்றும் டிரெண்ட் பாலிவுட்டை ஆக்கிரமித்திருக்கிறது. ‘தசாவதாரம் படத்தில் 10 கெட்அப் போட்டு நடித்தார் கமல். ‘அவ்வை சண்முகி’ படத்தில் 50 வயது பெண் வேடத்தில் நடித்தார். ‘இந்தியன்’ படத்தில் இந்தியன் தாத்தாவாக வேடம் அணிந்தார். அதேபோல் ‘சிட்டிசன்‘ படத்தில் அஜீத் வெவ்வேறு கெட்டப்பில் தோன்றினார். படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் விக்ரம் முயற்சி செய்கிறார். தற்போது ஷங்கரின் ‘ஐ படத்துக்காக உடல் மெலிந்தவராக நிஜதோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார். இதுபாலிவுட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பா என்ற பாலிவுட் படத்தில் மனவளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் குன்றிய கதாபாத்திரத்தில் அமிதாப் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடத்தில்தான் நடித்தார். அதற்கு போட்டியாக 12 கெட்அப்பில் இந்தி படத்தில் நடிக்கிறார் வித்யாபாலன். .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: