செவ்வாய், 24 செப்டம்பர், 2013

VR கிருஷ்ணய்யர் மோடிக்கு ஆதரவு ! சோஷலிசம் கம்யுனிசம் எல்லாம் பார்பன தளங்கள் ஆகிவிட்டன

வி ஆர் கிருஷ்ணய்யர்மோடிக்கு ஜே போடும் கிருஷ்ணய்யரின் இடதுசாரி பார்ப்பனியம் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.! இடதுசாரி பார்ப்பனியம் !
மோடி இப்படியொரு திடீர் ஆதரவை அவரே எதிர்பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வருமென்று நினைத்திருக்க மாட்டார். சமீபத்தில் 63-வது பிறந்த நாளை கொண்டாடிய மோடிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பல முற்போக்காளர்களால் வியந்தோதப்படும் மனித உரிமைப் போராளியுமான வி.ஆர். கிருஷ்ணய்யரிடமிருந்து வாழ்த்து கடிதம் வந்திருந்தது. அதில் வரும் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மிகச்சரியான பிரதமர் வேட்பாளர் மோடி தான் என கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஒன்று சூரிய மின்சக்தி, இரண்டு மது ஒழிப்பு, மூன்று மோடியும தன்னைப் போலவே ஒரு சோசலிஸ்டு! வி ஆர் கிருஷ்ணய்யர்
ஏற்கெனவே கடந்த ஜூன் மாத துவக்கத்தில் மோடி பாஜகவின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கிருஷ்ண அய்யர் அவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மது ஒழிப்பையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் குஜராத்தில் கொண்டு வரும் பட்சத்தில் நல்ல தலைவராக மோடி உருவெடுக்க முடியும் என்று வழிகாட்டியிருந்தார்.
கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்து பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியவர்களில் ஒருவர் வி.ஆர்.கிருஷ்ண அய்யர் என்பதை மறுக்க முடியாது. பல வழக்குகளில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மக்கள் தரப்பில் நின்று விளக்கம் சொல்ல முயற்சித்தவர் தான்.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசே இலவசமாக சட்ட உதவி வழங்க வகை செய்யும் அரசியல் சாசனம் பிரிவு 21-ஐ நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்திரவிட்டவர். இசுலாமிய தனிநபர் சட்டங்களை வைத்தும் ஓரளவு நியாயமான தீர்ப்புகளை வழங்கியவர்களில் முக்கியமானவர் கிருஷ்ண அய்யர் என்பதும் ஊரறிந்த உண்மை.
1980-ல் ஓய்வுபெற்ற பிறகும் மனித உரிமை செயல்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். மதானி நீண்ட காலம் சிறையில் வாடுவது பற்றி குடியரசுத் தலைவருக்கு பல முறை கடிதம் எழுதியவர். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் மறுவாழ்வுக்காக கடைசி நிமிடம் வரை குடியரசுத் தலைவருக்கு பகிரங்க கடிதம் எழுதி வருபவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளனுக்காக கூட குரல் கொடுத்து வருபவர் தான். 2008-ல் இரானில் பகாய் சமய வழிபாட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போது அதில் கையெழுத்திட்ட நீதிபதிகளில் இவரும் ஒருவர். இந்தியாவில் இசுலாமியர்கள் தாக்கப்படும்போதெல்லாம் பலமுறை அவர்களுக்காக குரல் கொடுத்தவர். 2002-குஜராத் படுகொலையை முதல்வர் மோடியே நன்கு திட்டம் தீட்டி நடத்திய இனப்படுகொலை என்று காட்டமாக அறிக்கை விட்டவர்.
இப்பேற்பட்ட மனித உரிமைப் போராளிதான் இன்று தனது பார்வையில் மோடி சோசலிஸ்டாக படுவதை வெட்கமில்லாமல் பொது சபையில் முன் வைக்கிறார்.
நம்பூதிரி பாடு
ஈ எம் எஸ் நம்பூதிரிபாடு
1957 கேரள சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற கிருஷ்ணய்யரை தனது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக நம்பூதிரிபாடு சேர்த்துக் கொண்டார். இவரது காலத்தில் தான் கேரளாவில் நிலச்சீர்திருத்தம்  முன்னோடி மாநிலம் என்ற வகையில் ஓரளவு நிறைவேற்றப்பட்டது. அறுபதுகளில் நீதித்துறைக்கு சென்று விட்ட இவர், ஓய்வு பெற்ற பின்னர் 1987-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி.எம்-ன் வேட்பாளராக காங்கிரசின் வெங்கட்ராமனை எதிர்த்து நின்றார். அப்போதும் அத்வானியிடம் ஆதரவு கேட்க இவர் தவறவில்லை. ஆனால் அத்வானியோ சோவியத் யூனியனை ஆதரிப்பவர்களை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு கிருஷ்ணய்யரின் மூக்கை உடைத்தார். இப்படி ஆதரவு கேட்டது பற்றி சிபிஎம் கட்சியினர் கொஞ்சமும் முணுமுணுக்கவில்லை.
இப்போது மோடியின் முறை. மோடியின் நிலைமையும் மக்கள் அரங்கில் மிகவும் பரிதாபகரமாக இருப்பதால் இதனை வேண்டாமென்றும் தட்ட முடியாது. வேண்டும் என்றும் பிடித்து மடியில் போட முடியாது. சொந்த கட்சியிலேயே சூன்யம் வைக்க பலரும் வலம் வருகையில் இதுபோன்ற யோக்யர்களின் சான்றிதழ் கொஞ்சம் அவருக்கு தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஓட்டை பிரிப்பதை தாண்டி அதில் ஒரு இழவும் இல்லை. எனினும் இடதுசாரி முகாம் மற்றும் சிபிஎம்மின் பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்கு கிருஷ்ணய்யரின் ஆதரவு மோடிக்கு தேவைப்படலாம். ராமனுக்கு விபீஷ்ணன் வேலை பார்க்க ஒருவர் கிடைத்திருப்பதாகவும் இதனைச் சொல்லலாம்.
சோசலிச குஜராத்தின் வாடகைத் தாய்மார்கள் பற்றி கிருஷ்ணய்யருக்கு தெரியாமல் இருக்கலாம். புள்ளிவிவரப் பொய்கள் மூலம் குஜராத்தின் வளர்ச்சி பொய்யாக கட்டியமைக்கப்படுவது இந்த நீதியரசருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் நலனிலான சோசலிசத்தை முதலாளிகளின் நலனுக்கான ராமராஜ்யத்திற்குள் புகுத்த முடியாது என்பது மோடிக்கு தெரியும். ஆனால் கிருஷ்ணய்யரை பொறுத்த வரை ஜெயிக்கும் குதிரைக்கு சோசலிசம் எனப் பெயர் வைத்து சாவதற்குள் (இப்போது அவருக்கு வயது 98) தான் கனவுகண்டது போல அல்லது குறைந்தபட்சம் நம்பூதிரிபாடு வகையறாக்களின்  கனவு போன்ற தோற்றத்தில் சோசலிச இந்தியாவை பார்க்கும் ஆவல் இருந்திருக்கலாம். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இந்துமத வெறியனாக, இசுலாமியர்களை கருவறுக்கும் வடிவமாக தெரிந்த மோடி இப்போது எப்படி ஒரு சோசலிஷ்டாக, அகிம்சா மூர்த்தியாக மாறினார் என்பதை பார்க்க வேண்டும்.
மோடி
படம் : நன்றி தி இந்து.
இந்தியாவை புண்ணிய பூமியாக பாவித்து, இந்து ஞானமரபின் ஆன்மிக தரிசனத்தை உயர்ந்த ஒன்றாக, கம்யூனிசத்திற்கு நிகராக நிறுவ விரும்பிய நம்பூதிரிபாடு போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் பாதிப்பு கிருஷ்ணய்யரிடம் உண்டு.
அது இல்பொருள் உவமையணியாக இப்போது கிருஷ்ணய்யரிடம் வெளிப்படுகிறது. பழைய மன்னர்களிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி பரிசில் பெற்றுச் சென்றார்கள் வறிய புலவர்கள். அவர்கள் தம் வயிற்றுப்பாட்டுக்காக புலமையை விற்றார்கள். கிருஷ்ணய்யர் போன்ற போலி முற்போக்காளர்களோ தம் நேர்மையை அகண்ட இந்துராஷ்டிரத்துக்காக விற்கிறார்கள். இதில் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சமாக மோடிக்கு ஒரு சோசலிச பட்டம் வேறு.
லஞ்ச, ஊழல் இல்லாத நிர்வாகத்தை தர மோடி முயற்சிப்பதாக கிருஷ்ணய்யர் சொல்லியதுடன், காந்தியின் வழியில் அரசியல், சமூக, பொருளாதார விசயங்களை அவர் பின்பற்றுவதாக வேறு கூறியுள்ளார். இதனை மோடி ஏற்றுக் கொள்வாரா எனத் தெரியவில்லை. மேலும் வறுமை ஒழிப்பு, சுவராஜ்யம் போன்றவற்றுக்காக மோடி பாடுபட வேண்டும் என்றும் கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். காந்தியின் ராமராஜ்யம் தான் மோடியின் சுவராஜ்யம் என்பது 2002-ல் நடந்த குஜராத் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்ட வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு தெரியாததல்ல.
எனினும் சில முற்போக்காளர்கள் கிருஷ்ணய்யரின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கலாம். அவருக்கு அதிக வயது என்பதால் டிமன்ஷியா போன்ற நினைவாற்றல் குன்றும் நோயாக இருக்கலாமோ என்றும் அவர்கள் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. சிபிஎம் கட்சி மட்டுமல்ல சிபிஎம் சார்ந்த அறிஞர் பெருமக்கள் பலரும் நல்ல இந்து மதம், நல்ல இந்து ஞான மரபு என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள். பார்ப்பனிய வருண தருமம், சாதிய சமூகம், ஏற்றத்தாழ்வுதான் இந்துமதத்தின் ஆன்மா என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இத்தகைய பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மரபை போற்றுவதற்கு பதிலாக பார்ப்பனியத்திற்குள்ளேயே நல்ல பார்ப்பனியத்தை கண்டுபிடிக்கிறார்கள் இந்த சிகாமணிகள். கிருஷ்ணய்யரின் மோடி ரசிப்புக்கு உள்ளே இப்படி ஒரு இடதுசாரி பார்ப்பனியத்திற்கான அடிப்படை உண்டு.
ஒரிஜினல் பார்ப்பனியம் போன்று இடது சாரி பார்ப்பனியமும் அம்பலப்படுத்த வேண்டியவைதான். கிருஷ்ணய்யரின் இறுதிகால விருப்பமும்  vinavu.com

கருத்துகள் இல்லை: