பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ
தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 600 பேர் பங்கேற்றனர். பின்னர் பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தூக்கி வீசப்பட்ட மக்கள் துடித்துடித்து இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சடலங்களாக காட்சியளித்தது. பலர் ரத்தம் சொட்டச் சொட்ட துடித்துக்கொண்டிருந்தனர். இன்று காலை நிலவரப்படி 78 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. பலர் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். தேவாலயத்திற்கு வாரம் தோறும் வந்து இசைக் கருவிகள் வாசிக்கும் ரியாஷ் மாசிஹ் அவரது மகன்கள் இம்தியாஸ், பிலால் ஆகியோரும் தப்பவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெஷாவர் கன்டோன்மென்ட் அரசு உயர்நிலைப்பள்ளி முதல்வர் வில்லியம் குலாம், அவரது மகன் டோனி, மகள் மரியாப், கல்லூரி மாணவர் ஜூனாயத் உள்ளிட்ட 5 பேர் இன்று உயிரிழந்தனர். அவரது பள்ளி முதல்வரின் மனைவியும் காயம் அடைந்தார். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக 4 பேர் கொண்ட விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கைபர் பாக்துங்வா காவல்துறை தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 20 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது maalaimalar.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக