வெள்ளி, 27 செப்டம்பர், 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழா முழுக்க முழுக்க ஜெயலலிதா பஜனை மண்டலியாகியது

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்கு சென்று வரும் கலைஞர்கள் அனைவருமே, இது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவா? இல்லை தமிழக அரசின் விழாவா? என்று தான் கேட்கிறார்களாம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு பதில் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதோடு, முக்கிய கலைஞர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருமுகிறது தெலுங்கு திரையுலகம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெலுங்கு சினிமா சார்பில் பலவித நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

டோலிவுட்டின் முக்கிய கலைஞர்களான இயக்குனர் K.விஸ்வநாதன், கமல், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்(மோகன் பாபுவிற்கும், சிரஞ்சீவிக்கும் அரசியல் பின்புலங்கள் இருப்பதால் விழாவை தவிர்த்துவிட்டார்களாம்).


ஞாயிறு காலையில் துவங்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்க, ஆரம்பம் முதலே அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த பிரபல தெலுங்கு இயக்குனர் நாராயண மூர்த்தி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிக்கொண்டிருந்த போது திடீரென மேடை மீது ஏறி அவரிடமிருந்து மைக்கை பிடுங்க முயற்சி செய்திருக்கிறார். இதைக்கண்ட அரங்கமே குழப்பத்தில் மூழ்க எவ்வளவோ தடுத்தும் மைக்கைபிடுங்க நாராயண மூர்த்தி முயற்சித்ததால் அரங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

விழாவில் நடந்துகொண்டது குறித்து பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நாராயண மூர்த்தி “ நான் அரங்கத்தினுள் சென்றதும் எந்த இடத்திலும் தெலுங்கு சினிமாவின் தந்தையான ரகுபதி வேங்கையா நாயுடுவின் ஒரு ஃபோட்டோ கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அதைவிட அதிர்ச்சிகரமான விஷயம் சிவமணியின் டிரம்ஸ் இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது தான். தெலுங்கு சினிமா வளர்ச்சியடைய முக்கிய காரணமாக இருந்த பலரும் கௌரவிக்கப்படுவார்கள், அதைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் வந்த எனக்கு கிடைத்தது ஏமாற்றம் தான். அந்த விழாவைப் பார்க்கும் போது இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைப் போல் இல்லை. ஏதோ தெலுங்கு சினிமாவின் இசை வெளியீட்டு விழாவைப்போல் இருந்தது” என்று கூறியுள்ளார்.



சினிமாவிற்காக உழைத்த ஜாம்பாவான்களின் படங்கள் இடம்பெற வேண்டிய இடத்தில் விழா ஏற்பாட்டாளர்களின் படங்கள் தான் வைக்கப்பட்டிருக்கிறதாம். 

மேலும் இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் கொண்ட ரஜினி, கமல் ஆகிய இருபெரும் நட்சத்திரங்கள் முதல் வரிசையில் உட்கார்ந்த பிறகு எழுப்பி பின்வரிசையில் உட்காரவைக்கப்பட்டு விழாவில் அவமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யை மூன்றுமுறை இடம்மாற்றி உட்காரவைத்து கிட்டத்தட்ட கடைசி வரிசைக்கே அனுப்பிவிட்டார்களாம்.

கருத்துகள் இல்லை: