திங்கள், 23 செப்டம்பர், 2013

கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களில் மைனர்கள் தப்ப முடியாது ! அவர்களும் மேஜர்களாக கருதப்படுவர்! வருகிறது சட்டம்

புதுடெல்லி:கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16
வயதுக்கு மேற்பட்ட மைனர்களை வயது வந்தவர்களாக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு குறைவானர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூரமான குற்றங்கள் புரிந்தாலும் அதிகபட்சம் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். அண்மைக்காலமாக பலாத்கார குற்றங்களில் மைனர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட இளம் குற்றவாளிக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்கியது. அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதே போல் மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கிலும் இளம் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். மைனர்களின் வயது வரம்பை 18 லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என பல்வேறு பெண்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வயது வரம்பை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட தள்ளுபடி செய்து விட்டது

16 வயதை கடந்த மைனர்கள் கொடூர குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களை வயது வந்தோராக கருதி கடுமையான தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் மைனர்களை வயது வந்தோராக கருத மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தியுள்ளது. 16 வயதிலிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் கொலை, பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்கள் புரியும் போது அவர்களை வயது வந்தோராக கருதி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இளம் சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: