வெள்ளி, 27 செப்டம்பர், 2013

நிலக்கரி சுரங்க வழக்கு: காங்கிரஸ் MP ஜிண்டாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் CBI questions Naveen Jindal for 7 hours, Dasari Narayan Rao also grilled

CBI questions Naveen Jindal for 7 hours, Dasari Narayan Rao also grilled காங்கிரஸ் எம்.பி.யும்,
தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன. இந்த நிறுவனங்கள் முன்னாள் மத்திய நிலக்கரி சுரங்கத்துறை இணை மந்திரி தாசரி நாராயண ராவிடம் இருந்து நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நவீன் ஜிண்டால் மற்றும் தாசரி நாராயண ராவ் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜராகுமாறு நவீன் ஜிண்டாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகாத நிலையில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அதன்பேரில் நவீன் ஜிண்டால் வெள்ளிக்கிழமை சி.பி.ஐ. முன் ஆஜராவார் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.> இதற்கிடையே இந்த வழக்கில் தங்களின் பங்களிப்பு குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், மராட்டியம், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை: