புதன், 25 செப்டம்பர், 2013

ஸ்பெக்ட்ரம் ஜே பி சியின் தலைவர் சாக்கோவுக்கு எதிராக பாலு உரிமை மீறல் தீர்மானம் !

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரித்த, பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் தலைவர், பி.சி.சாக்கோவுக்கு எதிராக, லோக்சபாவில், உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர, தி.மு.க.வும், பா.ஜ.,வும் நோட்டீஸ் அளித்துள்ளதால், புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.லோக்சபா அலுவல் ஆய்வுக்குழு, நேற்று மதியம், 3:00 மணிக்கு கூடி ஆலோசித்தது. சபாநாயகர் மீரா குமார் தலைமையில், நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்று ரயில்வே மானிய கோரிக்கைககள் மீது விவாதம் நடத்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, நிலக்கரி, விவசாயம், ஜவுளி, மரபுசாரா எரிசக்தி துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை எடுத்துக் கொள்வது என்றும், மே, 2 மற்றும், 3ம் தேதிகளில், நிதி மசோதா மீதான விவாதத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.மே, 8ம் தேதி, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, லோக்சபாவில் நிறைவேற்றவும், உணவு பாதுகாப்பு மசோதாவையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. சாக்கோ சேட்டன் திமுகவை ஒழித்து கட்ட எதோ தன்னால் ஆனா முயற்சி ? சேட்டா கொஞ்சம் பதுக்க வாசி


தி.மு.க., - எம்.பி.,- டி.ஆர்.பாலு மற்றும் அ.தி.மு.க., - எம்.பி., தம்பித் துரை ஆகியோர், கச்சத்தீவை மீட்பது தொடர்பான விவாதத்தை, சபையில் நடத்த வேண்டும் என, கூட்டத்தில், வலியுறுத்தினர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அறிக்கையை, ஊடகங்களுக்கு கசிய விட்டதற்காக, தலைவர் சாக்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பாலுவும், பா.ஜ.,வின் யஷ்வந்த் சின்காவும் வலியுறுத்தினர். சாக்கோ மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவும், நோட்டீஸ் அளித்தனர்.எம்.பி.,க்கள் மீதான உரிமை மீறல் குறித்து விசாரிக்க, அமைக்கப்பட்டுள்ள பார்லிமென்ட் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரே, சாக்கோ தான். அவருக்கு எதிராகவே, உரிமை மீறல் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால், புதிய பரபரப்பு கிளம்பலாம் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: