வரும் 26.9.2013 திருச்சியில் நடைபெற இருக்கும்
கிரிமினல் மோடியின் தலைமையிலான இளந்தாமரை மாநாட்டிற்காக பாஜக எல்லா சதி
வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள்
ஏகோபித்த ஜால்ராவையும் போட்டு வருகிறார்கள். மகஇக பொதுக்கூட்டத்தை
திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் மோடியின் கூட்டச் செய்திகளை
அவற்றில் செய்தி என்று எதுவும் இல்லையென்றாலும் அடித்து விடுகிறார்கள்.
தினமலர் உள்ளிட்ட பார்ப்பனிய ஊடகங்கள் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 1 இலட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள், நேரடியாக வருபவர்கள் ஒரு இலட்சம் ஆக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் அணி திரள்கிறார்கள் என்று பில்டப் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து மகஇக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது பேருந்திலிருந்து பொன்மலை இரயில்வே திடலைப் பார்த்தோம். இதில்தான் மோடி பேசுகிறார். என்னடா இவ்வளவு சின்ன இடமாக இருக்கிறதே, இதில் எப்படி லட்சம் பேர் இருக்க முடியும் என்று யோசித்தோம். இடையில் எமது தோழர்கள் ரயில்வே துறையில் விசாரித்து விட்டு சேகரித்த தகவல்கள் மற்றும் கள ஆய்வு மூலம் அதன் உண்மை நிலையை அறியத் தந்த போது நமது சந்தேகம் சரிதான் என்பதோடு இவர்களது புள்ளி விவரம் இங்கேயும் பெரிய மோசடி என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.
பொன்மலை ரயில்வே திடலில்தான் சென்ற தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் ஜெயலலிதா கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டே நின்றார்கள். பத்திரிகையாளர்கள் மற்றும் போலிசு தகவல் படி அதன் எண்ணிக்கை 40,000 ஆகும். நெருக்கியடித்துக் கொண்டு நின்றாலே இவ்வளவுதான் என்றால் நாற்காலி போட்டு உட்கார்ந்தால் எவ்வளவு வரும்?
பொன்மலை ரயில்வே திடலில் மோடி பேசும் மேடையைச் சுற்றி 60 அடி தூரம் பாதுகாப்பிற்காக வெற்றிடமாக விடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி மைதானத்தை 25 சதுரங்களாக பிரித்திருக்கிறார்கள். ஒரு சதுரத்தில் 750 நாற்காலிகள் போட முடியும், அவர்களது திட்டமும் அதுதான். அதன்படி 25 X 750 = 18,750 இருக்கைகள் மட்டுமே வருகிறது. மேடைக்கு இடது புறமாக பத்திரிகையாளர்களுக்கு 250 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதையும் கூட்டினால் மொத்தம் 19,000 இருக்கைகள் மட்டுமே போட முடியும். மேடையின் பின்புறம் உள்ள திறந்த மைதானத்தை கார் பார்க்கிங்கிற்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.
ஆக பாஜகவின் மோடி கலந்து கொள்ளும் இளந்தாமரை மாநாட்டில் பார்வையாளர்கள் அதிக பட்சம் 19,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேலும் அருகாமை வீடுகள், சாலைகளிலிருந்து ஒரு சிலர் நின்று பார்த்தாலும் அது ஒரு ஆயிரத்தைக் கூட தாண்டாது. கொஞ்சம் பெரிய மனது கொடுத்து கணித்தாலும் 20,000பேருக்கு மேல் இங்கே இடமில்லை. இதை சங்க வானர அம்பிகளுக்கு ஒரு சவாலாகவே தெரிவிக்கிறோம். இதைத் தாண்டி அங்கே ஒரு ஈ, காக்காய் கூட அமர முடியாது. இதில் 1 அல்லது 2 இலட்சத்திற்கு என்ன வேலை?
யோசித்துப் பார்த்தால் ஒரு நாற்காலி மேல் ஐந்து நாற்காலிகளை அடுக்கினால் அது ஒரு இலட்சத்தை தொடும். அப்படி அடுக்கி ஐந்தாவது நாற்காலி மேல் ஒருவரை அமர்த்தினால் மட்டுமே அந்தக் கணக்கு சரியாக வரும். இப்படி ஒருவருக்கு ஐந்து நாற்காலி வழங்கும் இந்தப் புரட்சிகர திட்டத்தை தமிழக பாஜக கும்பல் அதி தீவிரமாக யோசித்து நடைமுறைப்படுத்தப் போகிறது.
இதெல்லாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள். உத்தர்கண்ட் வெள்ளத்தில் ஐந்து டாடா சுமோவை வைத்து 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றும் போது 19,000 பேர் அமர முடிகின்ற இடத்தில் ஒரு இலட்சம் பேர் அமர்ந்ததாக கதை விட முடியாதா என்ன?
இப்பேற்பட்ட புளுகர்கள்தான் மைதானத்தில் 1 லட்சம் நாற்காலிகளை போடப்போகிறோம், இணையத்தில் ஒரு இலட்சம் பேர் பதிவு என்று வாய் கூசாமல் புளுகி வருகிறார்கள். குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் பொய்கள் போல மோடியின் கூட்டத்திற்கு வரும் பார்வையாளர் எண்ணிக்கையும் பொய்யாகத்தானே இருக்க முடியும்?
மகஇக பொதுக்கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள், மோடியின் பேனர் கிழிபட்டதற்காக 30 பாஜகவினர் சாலை மறியல் செய்ததை மாபெரும் போராட்டமாக வெளியிட்டன. முதலாளிகளின் காசில் வயிறு வளர்க்கும் பாஜக தனது விளம்பரங்களுக்காக பேனர்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டுவார் ஆளின்றி இறக்குமதி செய்து வருகிறது.
பொன்மலை ரயில்வே திடலுக்கு அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியை வரும் வியாழன் அன்று விடுமுறை அளிக்க கோரி பாஜக நிர்ப்பந்தித்து வருகிறது. அதை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தினர் சென்னையில் முறையிட்டுள்ளனர். தொப்பி மற்றும் தாடி வைத்திருக்கும் இசுலாமிய மக்களெல்லாம் போலிசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி உள்ளனர். இதைக் கண்டித்து இசுலாமிய அமைப்புகள் போலிசிடம் புகார் அளித்திருக்கின்றன.
பொதுக்கூட்டம் முடிந்தாலும் எமது அமைப்புகளின் பிரச்சாரப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இசுலாமியர் குடியிருப்புகளிலெல்லாம் எமது தோழர்கள் நம்பிக்கையூட்டும் விதமாக தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மோடி வரும் நாளன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடுவதற்கு பாஜக மற்றும் தமிழக அரசு முயன்று வருவதாக தெரிகிறது. மேலும் திருச்சி நகரின் போக்குவரத்தை ரத்து செய்து தீவு போல ஆக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். வெளியூர் பயணிகள் அன்று திருச்சியைக் கடந்து போவது கடினம் என்பதாகத் தெரிகிறது. எல்லாம் அந்த 19,000 சீட்டுகளுக்காக உள்ள கெடுபிடிதான்.
மேலும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு எதாவது கலவரம் செய்வதும் இந்துமதவெறியர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அது கூட்டத்திற்கு முன்போ பின்போ கூட இருக்கலாம். எனினும் இந்த மதவெறிக் கூட்டத்தை நிர்மூலம் ஆக்கும் வரை நாமும் ஓ vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக