'சேதுசமுத்திர திட்டத்தை நிறை வேற்ற, மத்திய அரசு முன் வந்துள்ள
நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசின்
கருத்துக்கு மாறாக, ஒரு மதவாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது
சரியானதாக எனக்கு தெரியவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிகூறியுள்ளார் அவரது
பேட்டி:தமிழகத்தில், பார்வையற்றவர்கள் கடந்த, ஒன்பது நாட்களாக அரசை
எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்தவரையில்,
இந்தச் செயலைக் கண்டிக்கத் தான் முடியும்.பார்வையற்றவர்கள்,
மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை இந்த அரசு ஆரம்பம் முதல்அலட்சிய
கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது.இந்திய சினிமா நூற்றாண்டு விழாவிற்கு,
மூத்த கலைஞர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் குறித்து எதுவும்
நான் சொல்ல விரும்பவில்லை.
மத்திய அரசில், சொலிசிட்டர் ஜெனரலாகப்
பதவி வகித்த மோகன் பராசரன் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் ஆஜராகப்
போவதில்லை என திடீரென விலகிஇருக்கிறார்.இந்த வழக்கில் அவரின் தந்தை,
மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜராகிறார். இதனால், முக்கிய மான இந்த
வழக்கின் நலன் கருதியும், எவ்வித முரண்பாடும் ஏற்படாமல் இருப்பதற்காக
ஆஜராவதில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேறு ஒருவரை
நியமிக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனக்குப் பதிலாக இனிமேல் மூத்த
வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜராவார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.வேறொரு
இதழில், இலங்கை மன்னன் ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட தன் மனைவி சீதாவை
மீட்பதற்காக ராமன், ராமர் பாலத்தைக் கட்டினார் என்பதை அவர் நம்புவதாகவும்,
மேலும் இந்த வழக்கில் ஒரு மனுதாரருக்காக, அவரின் தந்தை பராசரன் ஆஜராவதால்,
இந்த வழக்கில் தான் தொடர்ந்து, வாதாடுவது முரண்பட்டதாக இருக்கும் என,
கூறியதாக செய்தி வந்துள்ளது.
மத்திய அரசு, ஒரு மதச்சார்பற்ற அரசு. அந்த அரசின் வழக்கறிஞரான, சொலிசிட்டர் ஜெனரலாக இது நாள் வரை மோகன் பராசரன் பணியாற்றி வந்தவர், திடீரெனமத்திய அரசின் முடிவுக்கு மாறாக, தன்னை ஒரு மதவாதி என்பதை போலத் தெரிவித்திருக்கிறாரா என தெரியவில்லை. மேலும் அவர் சொலிசிட்டர் பதவியிலிருந்தேவிலகியதாகத் தெரியவில்லை. இந்த ஒரு வழக்கிலிருந்து மட்டும்விலகியதாகத் தெரிகிறது.
சேது சமுத்திர திட்டம் என்பது தமிழகத்திற்கு நன்மை பயக்குகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன் வந்து, சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் தெரிவித்திருக்கும் நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, ஒரு மதவாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை.இவ்வாறு, கருணாநிதி கூறிஉள்ளார். dinamalar.com

மதவாதி போல்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக