செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது !

சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனையடுத்து 16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் ஜாமீனில் வெளியே வருகிறார வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கைது செய்யப்பட்டு கடந்த 16 மாதங்களாக ஐதராபாத் சஞ்சல்கூடா சிறையில் ஜெகன் அடைக்கப்பட்டார். சிபிஐ நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு இவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை 4 மாதத்துக்குள் முடிக்கும்படி சிபிஐ.க்கு உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.இதனையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: