ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ராஜீவ் காந்தியின் ஆத்மாவிடம் தமிழ் தலைவர்கள் பாவ மன்னிப்பு கேட்கவேண்டும்

சரியாக இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்து
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்
மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அரசு வடக்கில் இன்று உருவாக்கி உள்ளது ,இதற்காக  உயிர்கொடுத்தவர்கள் பலர் ,ராஜீவ் காந்தி முதல் கொண்டு பத்மநாபா என்று இந்த பட்டியல் நீளும் ,  இந்த மாகாண சபைக்கு உண்மையில் சிங்கள மக்கள் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை ,  ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை தட்டி கொட்டி வெறியாட்டம் போடவேண்டும் என்று திட்டம் போட்டு  சகல அநியாயங்களையும் கட்டவிழ்த்து விட்டது பிரபாகரன் என்ற பயங்கரவாதிதான் . அந்த பயங்கரவாதியை  அன்று பலர் ஆதரித்தனர், பயத்தினாலோ அல்லது அறிவின்மையாலோ அல்லாது உண்மையில் தங்கள் சுயநலங்களை தக்க வைக்கவே அவ்வாறு நடந்து கொண்டனர்,
அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அன்று இணைந்த வடகிழக்கு மாகாண அரசு அமைந்தது , அதில் அளிக்கப்பட்ட உரிமைகள் போதாது போன்ற கோஷங்களை எழுப்பி புலிகள் அதை இல்லாமல் செய்துவிட்டனர், அது மட்டுமல்ல அதில் பங்கு பற்றிய பலரையும் கொலையும் செய்து விட்டனர், அதன் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தப்பி இந்தியாவுக்கு சென்று விட்டார் . அங்கு சென்ற இதர பிரமுகர்களையும் புலிகள் தேடி தேடி கொன்றனர் , அவர்களின் கொலையில் இருந்து மயிரிழையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தப்பினார் , பின்பு அவரே புலி விசுவாசியாக மாறினார், அவர் மட்டுமல்ல அடைக்கலநாதன் சிவாஜிலிங்கம் சேனாதிராஜா சம்பந்தர் போன்ற எல்லோரது கதையும் அதுதான் , புலிக்கு பயந்து பின் புலியையே ஆதரித்து அதன் பின் அவர்கள் அழிந்ததும் அப்பாடா என்று ஒருமாதிரியாக இன்று தேர்தல்களின் நின்று வெற்றிகளும் பெற்று ஆசான்களில் அமர்ந்து விட்டனர்,
இவர்களுக்கு இன்று பயங்கரவாத பயம் இல்லாத  வாழ்வை  கொடுத்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் ,

அன்று ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மாகாணசபை அரசை கொண்டு வந்த பொழுது புலிகளை குஷிபடுத்த சகல தமிழ் தேசியவாதிகளும் அந்த மாகாண சபை ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்றும் என்னும் என்னனவோ கருத்துக்கள் எல்லாம் கூறி அதை முர்க்க தனமாக எதிர்த்தனர் ,
dbs ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்கள் முதல் தொலைகாட்சிகளில் வானொலிகளில் எல்லாம் வந்து அரசியல் நிலவரம் பற்றி வகுப்பு எடுத்த அத்தனை நாய்க்குட்டி  பூனைக்குட்டிகளும் கூட இந்த மாகாண சபையானது தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது ,
எமது மக்களின் உள்ளத்திலும் உணர்ச்சியிலும் எழும் வேட்கைகளை தாகங்களை தீர்த்து வைக்காது ,
வித்தாகி போனவர்களுக்கு சத்தாகாது . என்பது போன்ற ஏதாவது புதிது புதிதாக காரணங்களை தேடி தேடி கூறி ஒருமாதிரி  குரங்கு கை பூமாலையாக  தமிழ் மாகாண சபையை குழி தோண்டி புதைத்தனர் ,
இவர்களின் இந்த கூத்துக்கெல்லாம் நெடுமாறன் வைகோ போன்ற தமிழக  சுயநலமிகள் சாத்தான்களாக இருந்து கூத்தாடி கூத்தாடி கெடுத்தனர்,
ஈழத்தமிழர்கள் மேல் உணமையாகவே பற்று கொண்டு எந்த உதவியும் செய்ய தயாராக இருந்த ராஜீவ் காந்தியை ஒரு மன நோயாளியின் சொல் கேட்டு கொச்சை படுத்தினார்கள்.
ராஜீவ் காந்தியின் ஆத்மாவிடம் தமிழ் தலைவர்கள் எல்லாம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்

கருத்துகள் இல்லை: