இங்கே காணப்படும் vinothini போன்ற பெண்களின் வாழ்வை கருக்கியது அசிட் மட்டுமல்ல ஆணாதிக்க பயங்கரவாதமும்தான்
சென்னை: பெண்கள் மீது, "ஆசிட்' வீசப்படுவதை
தடுக்க, தமிழக அர” தீவிர
நடவடிக்கை எடுக்க உள்ளது. "தமிழகத்தில், "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்த, சட்டம் கொண்டு வரப்படும்; அதுவரை, "ஆசிட்' விற்பனை, விஷம் சட்டத்தின் கீழ், ஒழுங்குபடுத்தப்படும்' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஈரோட்டைச் சேர்ந்த, சாந்தி என்பவர், தாக்கல் செய்த மனு:உரிமம் பெறாமல், கடைகளில், "ஆசிட்' விற்பனை நடக்கிறது. சமீபத்தில், வினோதினி என்பவர், "ஆசிட்' வீச்சுக்கு பலியானார். பெண்கள் மீது தாக்குதல் நடத்த, "ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும்தடை வேண்டும்:உரிமம் பெறாமல் விற்பவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிபொருள் சட்டத்தை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். உரிமம் இன்றி, கடைகளில், "ஆசிட்' விற்பனை செய்வதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணையில் உள்ளது. நேற்று, இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மணிகண்டன் வதன், ""கடைகளில், "ஆசிட்' தாராளமாக கிடைக்கிறது; "ஆசிட்' விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.தமிழக அரசு சார்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, ""தடை விதிக்க சாத்தியமில்லை; விற்பனையை ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த, சட்டம் கொண்டு வரப்பட உள்ளது,'' என்றார்.
தமிழக அரசு சார்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை தாக்கல் செய்த பதில் மனு:< செய்திக் குறிப்பு: இவ்வழக்கு, கடந்த மாதம், விசாரணைக்கு வந்த போது, தமிழக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பை, அட்வகேட்-ஜெனரல் தாக்கல் செய்தார். அதில், "ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்த, சட்டசபையில், சட்ட மசோதா கொண்டு வர உள்ளது; உயிரிழந்த, வித்யாவின் குடும்பத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாய், வழங்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது. "ஆசிட்'டை பயன்படுத்தி, ஒருவர்மீது தாக்குதல் நடத்துவது, காயப்படுத்துவது, கொடூரமான குற்றம். இதனால், உயிர் இழப்பு, நிரந்தர சித்ரவதை, பிரச்னைகள் ஏற்படும். எனவே, "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்துவது அவசியம். சுப்ரீம்கோர்ட்டும், தகுந்த சட்டப் பிரிவை கொண்டு வர உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும், சட்டம் கொண்டு வர, அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு எதிராக, "ஆசிட்' டை ஆயுதமாக பயன்படுத்துவது தடுக்கப்படும். கடுமையான விதிகளுடன், தண்டனை விதிப்பதற்கும், வகை செய்யப்படும்.அரசுக்கு அதிகாரம்:இந்தச் சட்டம், "ஆசிட்' விற்பனையையும், வாங்குவதையும், ஒழுங்குபடுத்தும். தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, "விஷம்' சட்டத்தின் கீழ், "ஆசிட்' விற்பனை ஒழுங்குபடுத்தப்படும். இந்தச் சட்டத்தின் கீழ், விதிகளை உருவாக்க, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுஉள்ளது.அதன்படி, உரிமம் வழங்குவதற்கான அதிகாரி நிர்ணயம், விஷம் மற்றும் "ஆசிட்' விற்பனை செய்யும் இடங்களை ஆய்வு செய்வதற்கான அதிகாரங்கள், குறித்த விதிகளை, தமிழக அரசு வகுத்துள்ளது. அதன் அடிப்படையில், "ஆசிட்' மற்றும் விஷம் விற்பனை ஒழுங்குபடுத்தப்படும். மாவட்டக் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு, தேவையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.>சிகிச்சை பெறுபவர்கள்:"ஆசிட்' வீச்சால் பாதிக்கப்படுவோருக்கு, உடனடியாக முதலுதவி அளிக்கப்படும். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் ஒழுங்கிணைந்த சுகாதார காப்பீட்டு திட்டம், "ஆசிட்' வீச்சால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு பொருந்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் புனரமைப்பு கிடைக்க, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையில், குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது, சமூக, உளவியல், பொரு ளாதார ஆதரவுகளை வழங்கும். நஷ்டஈடு வழங்கவும், அரசுக்கு குழு பரிந்துரை செய்யும். தொழில் செய்வதற்கு, 15 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படும். இதில், 25 சதவீதம், மானியம் வழங்கப்படும்.எனவே, "ஆசிட்' விற்பனையை ஒழுங்குபடுத்தவும், "ஆசிட்' மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனரமைப்பு வசதிகளை அளிக்கவும், அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.இவ்வழக்கு விசாரணையை, இம்மாதம், 17ம் தேதிக்கு, நீதிபதி கிருபாகரன், ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக