கவுரவ கொலைக்கு எதிராக
ராதாமோகன் இயக்கியுள்ள படத்துக்கு எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. ‘பயணம்‘, ‘மொழி‘ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராதா மோகன். அடுத்து பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ‘கௌரவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஜாதி பிரச்னையையும், தருமபுரி சம்பவத்தையும் மையமாக வைத்தும் உருவாகியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த சிலர் கவுரவ கொலை என்ற பெயரில் ஒருவரை கொல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்கமுடியாது. படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கோவை பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி ராதாமோகன் கூறும்போது, ‘இப்படம் கவுரவ கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதற்கு முன் படத்தை பார்க்கும்படி குறிப்பிட்ட சமூகத்தினரிடம் கேட்டிருக்கிறேன். மேலும் தருமபுரி சம்பவத்தை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்படவில்லை. அந்த சம்பவம் நடந்த நேரத்தில் எனது படத்தின் 80 சதவீத பணிகளை நான் முடித்துவிட்டிருந்தேன். இப்படத்தை பார்த்தால் எனது நோக்கம் என்ன என்பது எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு புரியும். அரசு கேட்டுக்கொண்டால் இப்படத்தை ரிலீசுக்கு முன்பே திரையிட்டு காட்ட தயார்‘ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக