வியாழன், 11 ஏப்ரல், 2013

பத்மநாபசாமி கோவிலில் 700 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு ! மக்களிடம் சுரண்டி கொழுத்த மன்னர்கள்

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் இருந்து 700 கிலோ எடை கொண்ட தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தங்க சங்கிலியில் மட்டுமே 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம்.திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் உள்ளன. ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. பி அறையை தவிர மற்ற 5 அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றில் உள்ள பொக்கிஷங்கள் உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.இதன் விபரம் பற்றி 4 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இது வரை செய்யப்பட்ட மதிப்பீட்டின் விபரங்களை உச்சநீதிமன்றத்தில் இக்குழு தாக்கல் செய்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'சி,டி, இ மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடிந்து விட்டது. ஏ அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. 216 நாட்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 1 லட்சத்து 5 ஆயிரத்து 656 பொருட்கள் கணக்கிடப்பட்டுள்ளன. ஒரு நாளில் அதிக பட்சமாக 3 அல்லது 4 ஆபரணங்களை மட்டுமே மதிப்பீடு செய்ய முடிந்தது.ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையிலான வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது தான் மதிப்பீடு தாமதத்துக்கு காரணம். இதுவரை ரூ. 19.50 லட்சம் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. இந்த நாணயங்களை மதிப்பீடுவதற்கு குறைந்தபட்சம் 2 மாதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: