செவ்வாய், 9 ஏப்ரல், 2013

துணைநகரம் அன்று எதிர்த்த ஜெயலலிதா! அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததோ

சென்னை:"மதுரை துணை நகரம் விவகாரத்தில், "அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே, அம்மையே... அம்மையே... அம்மையே...' என்று தான் எனக்கு பாடத் தோன்றுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திருமழிசையில், தி.மு.க., ஆட்சியில் ஒரு துணை நகரம் அமைக்கும் முயற்சிகளில், 2006ல் பொறுப்புக்கு வந்ததும், துவங்கினோம். அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும், எதிர்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும், தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்காக, நஞ்செய், புஞ்செய் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என, தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு, 2006ல், தி.மு.க., துணை நகரத் திட்டத்தை அறிவித்த போது, ஜெயலலிதாவும், வேறு சிலரும், அதை எதிர்க்காமல் இருந்திருந்தால், தி.மு.க., ஆட்சியில், துணை நகரம் வந்திருக்கும். சென்னையின் இட நெரிசலும், ஓரளவு குறைந்திருக்கும். ஆனால், அன்றைக்கு தி.மு.க., அரசு துணை நகரத்தை அறிவித்த போது, எதிர்க்கபட்டாலும், தற்போது சட்டசபையில், ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் மதுரையில துணை நகரம் அமைக்கப் போவதாக அறிவித்திருப்பதை, அவருடைய கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுப் பாராட்டியுள்ளன.


மதுரை துணை நகரமும், திருமழிசைப் போல் காலதாமதமாகி விடாமல், விரைவில் நடைமுறைக்கு வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் துணை நகரத்தை அறிவித்தபோது, மறுநாளே அது பற்றி, அநாகரிகமாக கொச்சைப்படுத்தி, துணை என்ற வார்த்தையை வைத்து, அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின், தற்போதைய துணை நகரத்தைப் பற்றி நான் அவர் பாணியிலே அறிக்கை விட விரும்பவில்லை.மாறாக அவர் விடுத்த அறிக்கையைத் தான், தற்போது ஞாபகப்படுத்தியிருக்கி÷ றன். "அந்த நாள் ஞாபகம், நெஞ்சிலே வந்ததே அம்மையே, அம்மையே' என்று தான் பாடத் தோன்றுகிறது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்,

கருத்துகள் இல்லை: