"தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டாம்' என,
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி தலைமை, கண்டிப்பான அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாளுக்கு இன்னும் தான் ஒரு புதுசா பூத்த ரோசான்னு நெனைப்பு. எப்போ கிழவியோட கூட்டு சேர்ந்தாச்சோ, அப்பவே அண்ணனுக்கு மதிப்பு கோவிந்தா. இனிமே யார் கூட சேர்ந்தா என்ன?சேராட்டா என்ன? தனியா நினனத்தான் என்ன? திமுகவை விட்டு விலகி இருந்து, தன்னை மிஸ்டர் கிளீனாக காட்டிக்கொள்ள நினைப்பது புரிகிறது. அப்போது தான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்ற வியாபார உத்தியும் தெரிகிறது. ஆனாலும், என்ன தான் தலைகீழாக நின்றாலும் இனிமேல், யாரோடாவது கூட்டு சேர்ந்தால் தான் கடையை நடத்த முடியும். தனியாக நின்றே தீருவேன் என்றால் இவர் கட்சி சார்பாக நிற்பதற்கு, மனைவியும் மைத்துனனும் மட்டுமே மிஞ்சுவார்கள். கூட்டு என்று வைத்தால், திமுகவோடு சேர்ந்தாலும் ஆப்பு காங்கிரசோடு சேர்ந்தாலும் ஆப்பு. கம்யூனிஸ்டுகளில் அதிமுகவின் அடிமை பாண்டியன் கட்சியோடு சேர முடியாது. இன்னொன்று இருக்குமிடத்தை விளக்கேற்றி பார்க்க வேண்டியுள்ளது. மற்ற லெட்டெர் பேடுகளை சேர்த்துக்கொண்டு கூட்டணி தலைவர் நான் தான் என்று மூன்றாவது அணியமைத்து பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு டப்பு காலியாகும். இந்தாள் தான் குனிய வேண்டும். அதற்கு வீட்டம்மா ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் அண்ணனுக்கு திரிசங்கு கதி தான். கடந்த சட்ட மன்ற தேர்தலில், வருவது வரட்டும் என்று தனித்து நின்றிருந்தால், மக்கள் மத்தியில் மரியாதை இருந்திருக்கும். அதுவும் போச்சு. கிழவியை எதிர்த்ததால், நம்பிக்கையும் போச்சு. இரண்டுக்கும் தகுதியில்லாத ஒருவரை நாடாளுமன்ற தேர்தலாகட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும் மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? இனி அண்ணன் பாடு டிங்கி டாங்கி தான்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோயம்பேட்டில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. மீதமுள்ள இடத்தில், தற்போது, அக்கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, விஜயகாந்தின் கட்சி அலுவலகம் மற்றும் வீடுகளில், வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
அரசியல் உள்நோக்கத்துடன், வருமான வரி சோதனை நடப்பதாக, தி.மு.க.,வினர் மீது, விஜயகாந்த், அப்போது குற்றம் சாட்டினார். தொடர்ச்சியாக, தே.மு.தி.க.,வினருக்கு, பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. இதனால், தி.மு.க., மீது கடும் அதிருப்தி அடைந்த விஜயகாந்த், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 29 தொகுதிகளில் வெற்றி பெற்று, விஜயகாந்த், எதிர்கட்சி தலைவரானார்.
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.,வை கழற்றி விட்டு, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு, அ.தி.மு.க.,வுக்கு எதிராக, தே.மு.தி.க.,வினர் அரசியல் செய்ய துவங்கினர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த விஜயகாந்த், ஆட்சிக்கு எதிராக, குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அதே நேரத்தில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், அருண்பாண்டியன் ஆகியோர், முதல்வரை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். இவர்களை தொடர்ந்து, சமீபத்தில், சுரேஷ்குமார் எம்.எல்.ஏ.,வும், முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவு அணியில் இணைந்துள்ளார். இதன் காரணமாக, தே.மு.தி.க.,வின் பலம், 24 என்ற அளவில் குறைந்துள்ளது.
தே.மு.தி.க.,வின், ராஜ்யசபா எம்.பி., கனவை தகர்க்கும் வகையில், எம்.எல்.ஏ., இழுப்பு நடவடிக்கைகள், அ.தி.மு.க.,வால் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தி.மு.க., ஆதரவுடன், அக்கட்சி ராஜ்யசபா எம்.பி., சீட்டை பெறும் என்றும், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில், இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் வாய்ப்புள்ளது.இதற்கான, முதற்கட்ட பேச்சுவார்த்தை, எண்ணிக்கை அடிப்படையிலான சீட் ஒதுக்கீடு ஆகியவை சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிகிறது. அதற்கு அச்சாரம் வைத்தது போல், பழைய பகைகளை மறந்து, தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வினர், மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை, நட்பு பாராட்டி வருகின்றனர்.
ஆனால், "ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்காக, நான் யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன். பணம், பதவி வேண்டும் என நினைத்திருந்தால், நான் எப்படியோ இருந்திருப்பேன்' என, சமீபத்தில், சென்னையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த் பேசினார்.
இதனிடையே, சட்டசபையில் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களுடன், தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கம் காட்டி வரும் தகவல், தே.மு.தி.க., தலைமையின் கவனத்திற்கு சென்றுள்ளது. சட்டசபையில் பேசுவது மட்டுமின்றி, டீ குடிப்பது, ஒன்றாக சேர்ந்து உணவருந்த செல்வது போன்றவற்றிலும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஈடுபட்டுள்ளனர்.இது பிற்காலத்தில், பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என கட்சி தலைமை முன்கூட்டியே யோசிக்கிறது. அதனால், "தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்களுடன், யாரும் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது' என, கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் உத்தரவால், தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்களும் அடக்கி வாசிக்க துவங்கியுள்ளனர்.
-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக