வியாழன், 26 ஏப்ரல், 2012

விஜயகாந்தின் சினிமா ஸ்டைல் அதிரடி அப்ரோச், ஸ்கோர்

சட்டசபையில் தீர்மானங்கள், அறிவித்தல்கள் என்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்க, சட்டசபை பக்கம் தலைவைத்தும் படுக்காமல் தொகுதி தொகுதியாக சுற்றி வந்துகொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
அவர் விசிட் அடித்த தொகுதிகளில் இந்த புதிய அணுகுமுறை அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கை ஏற்படுத்தவே செய்கிறது.
அவர் செல்லும் ஒவ்வொரு தொகுதியிலும், “சட்டசபையில் என்னை பேச விடுகிறார்கள் இல்லை. அதுதான் மக்களாகிய உங்களிடம் நேரில் வந்துவிட்டேன்” என்று கூறுவது நன்றாக எடுபடுகிறது.

‘சட்டசபையில் இருந்து விஜயகாந்த் சஸ்பென்ட்’ என்ற செய்திக்கு அதீத விளம்பரம் கொடுக்கப்பட்டதால், விஜயகாந்த் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. “உங்களுக்காக கேள்வி கேட்க போய்தான், என்னை வெளியே அனுப்பினார்கள்” என்பதுபோன்ற ஒரு பிக்சரை கிரியேட் பண்ண முயல்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
அந்த முயற்சியிலும், ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும்.
“சட்டப் பேரவையில் தே.மு.தி.க.வினர் எந்த விஷயம் குறித்து கேள்வி எழுப்பினாலும், அதற்கு அமைச்சர்களும், முதல்வரும் ஆதாரம் உள்ளதா? அத்தாட்சி உள்ளதா? என கேட்டு வருகிறார்கள். இப்போது 4 நாட்களில் 6 தொகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து 6 முறைகேடுகள் குறித்து ஆதாரங்களைத் திரட்டியுள்ளேன்.
இந்த ஆதாரங்களை, மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்ப உள்ளேன். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ்” என்று பேசியிருக்கிறார் விஜயகாந்த்.
இது ஒரு சினிமா ஸ்டைல் அப்ரோச்தான். மக்களில் பெரிய சதவீதத்தினரும் சினிமாவோடு இரண்டறக் கலந்தவர்கள் என்பதால், இதெல்லாம் அவர்களுக்கு த்ரில்லிங் ஆக இருக்கிறது.
ஆத்தூர் அருகே கெங்கவல்லி தொகுதியில், கொண்டையம்பள்ளியில் ரேஷன் கடையில் சினிமா ஸ்டைலில் ஒரு அதிரடி செய்தார் விஜயகாந்த்.
5 லிட்டர் மண்ணெண்ணைக்கு பணம் வாங்கிக் கொண்டு 4 லிட்டர் மட்டுமே வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களை, சொல்லடியால் தாக்கினார். தீவிரவாதிகளை மடக்கிவிட்ட ஹீரோ போல இவர் எகிறவே, ரேஷன் கடை ஊழியர்கள் கடையை மூடிவிட்டு எஸ்கேப்!
அது போதாதா?
அ.தி.மு.க. அரசு ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு விஜயகாந்த் பெரிய சவாலாக இருக்க சான்ஸ் அதிகம்.

கருத்துகள் இல்லை: