தமிழகத்தில் அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் உதகையில் 28.04.2012 அன்று நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதற்காக நீலகிரி மாவட்டம் சென்ற அவருக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். ன்னர் பேசிய அவர், தலைவர் கலைஞர் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்து, இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களும், மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியும் நிறைவேற்றப்பட முடியாத சாதனைகளையெல்லாம் நிறைவேற்றினார். 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 5 வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் வரும். ஆக தேர்தல் நடந்தது 2011. மீண்டும் எப்போது தேர்தல் வரும் என்று கேட்டால், 5 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் வரும்.ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியின் அக்கிரமத்தை பார்க்கிறபோது, 2015ல் வருமா, 2014ல் வருமா அல்லது 2013ம் ஆண்டே வந்துவிடுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக