வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கனிமொழியின் income list அமலாக்கப் பிரிவிடம் தாக்கல்!

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியின் சொத்து விவரங்கள் என்ன என்பது குறித்த பட்டியல் டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கனிமொழியின் வங்கிக் கணக்கு அறிக்கைகள், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரம், முதலீடு விவரம், பங்குப் பத்திரம், நிதி ஆதார ஆவணம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு திட்டமிட்டு சம்மனும் அனுப்பியது.
இந்த நிலையில் நேற்று கனிமொழி சார்பில் அவரது சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.கனிமொழியை இயக்குநராக கொண்டுள்ள கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி கடன் தொகை வந்தது குறித்த சர்ச்சையில்தான் கனிமொழி கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்ததப் பணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. ஆனால் இது கடன் தொகை மட்டுமே, இதையும் கூட திருப்பிக் கொடுத்து விட்டோம் என்பது கனிமொழி தரப்பிலன் வாதமாகும்

கருத்துகள் இல்லை: