ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

நியூயார்க்,ஏப்.21: அமெரிக்காவில் படித்துவந்த இந்திய மாணவர், ஏப்ரல் 19-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஒடிசாவைச் சேர்ந்த சேஷாத்ரி ராவ்(24) அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் படித்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.  இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.  இன்னும் ஒரு மாதம் நிறைவடைந்தால் ராவ் தனது படிப்பை முடிக்கப் போகும் நிலையில் நடந்த இச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விரைவில் மாணவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கண்டனம்... மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  "மத்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தும்' என்று ஒடிசா முதல்வருக்கு மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: