சனி, 28 ஏப்ரல், 2012

வீரபாண்டியார்: திமுக தலைவராக யார் வந்தாலும் ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்

சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி பகுதி, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார். அப்போது அவர், தி.மு.க., தலைவராக யார் வந்தாலும் நான் ஆதரிக்கத் தயாராகவே உள்ளேன். ஆனால், உள்ளூரில் எனக்கு எதிராக சதி வலை பின்னுகின்றனர்.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலின்போது, பதவி வேண்டி என்னைச் சந்திக்க வருபவர்களைக் காட்டிலும், கட்சிக்காக உண்மையாகத் தொண்டாற்றக்கூடிய நீங்கள் தான் எனக்கு முக்கியம்.நான் மாவட்டச் செயலராக வந்தால் தான், இங்கு மேடையில் அமர்ந்து இருப்ப வர்கள், மீண்டும் மேடையில் அமர முடியும். வேறு யாராவது வந்தால், வேறு யாராவது தான் மேடையில் அமருவர்’’என்று கூறினார்

கருத்துகள் இல்லை: