சனி, 28 ஏப்ரல், 2012

சுயமரியாதைத் திருமணம் அற்புதமான வாழ்வியல் சிந்தனை

தஞ்சையில் உலக புத்தக நாளை முன்னிட்டு சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் அறிமுக விழா!

எஸ்.எஸ்.இராஜ்குமார் சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் வெளியிட முனைவர் ரெ.கணேசன், நூலகர் வி.சிவகாமி, ஆசிரியர் ந.கலைச்செல்வி, கண்ணன், தி.மு.க. தொ.அருளானந்தசாமி, சி.அமர்சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் பதவாளர் முனைவர் மு.அய்யாவுதஞ்சை, ஏப். 27-உலக புத்தகநாள் விழாவை முன்னிட்டு தஞ்சையில் 23.4.2012 அன்று மாலை 6.30 மணியளவில் ந.பூபதி நினைவு பெரியார் படிப் பகம் சார்பில், படிப்ப கத்தில் சுயமரியாதைத் திருமணம் தத்துவதும் வரலாறும் நூல் அறிமுக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் அனை வரையும் வரவேற்று மாநில இளைஞரணி செயலாளரும், படிப்பக செயலாளருமான தஞ்சை இரா.செயக் குமார் உரையாற்றினார். தஞ்சை நகர ப.க. செய லாளரும், படிப்பக தலைவருமான க.கருணா மூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினர். படிப்பக பொருளாளரும், பொதுக்குழு உறுப்பின ருமான கை.முகிலன், தஞ்சை நகர தலைவரும் படிப்பக துணைச்செய லாளருமான வ.ஸ்டாலின், நகர செயலாளர் சு.முரு கேசன், படிப்பக துணைத் தலைவரும், நகர ப.க. அமைப்பாளருமான பவர் வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, படிப்பக பொருளாளர் கை.முகி லன், தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் தொ. அருளானந்தசாமி, தஞ்சை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சி. அமர்சிங், திராவிடர் கழக துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
நூலினைப் பெற்றுக் கொண்டு பூண்டி புட் பம் கல்லூரி ஆங்கில துறைத் தலைவர் முனை வர் ரெ.கணேசன், கலெக் டர் முருகராஜ் நகர் கண் ணன், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் வி.சிவ காமி, ஆழி வாய்க்கால் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலை மையாசிரியர் ந.கலைச் செல்வி ஆகியோர் உரை யாற்றினர்.
தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் தொ. அருளானந்தசாமி, தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங், தி.மு.க. காவேரி நகர் ராஜ்குமார், ரெட்டிப்பாளையம் பக்கிரிசாமி,தமிழ்மணி, மாதாக்கோட்டை பொறியாளர் சவரி முத்து, முரசொலி ரவி உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக தோழர் கள், பொறுப்பாளர்கள் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
பதிவாளர் மு.அய்யாவு
பெரியார் மணியம் மை பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் மு.அய்யாவு தொடக்கவு ரையாற்றினார். அவர் தமதுரையில் குறிப் பிட்டதாவது : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தத்துவ பேராசிரியர் பால்கார்ட்ஸ் அவர்கள் 10 பக்கம் கொண்ட ஒரு அற்புதமான வாழ்வியல் சிந்தனையை, அறிவி யலை வாழ்க்கையாக கொண்டு வாழ் என்று உரையாற்றினார். பெரியாரின் தத்துவம் அயல்நாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ்நாட் டிற்கு வந்து பெரியாரை பாடமாக எடுத்துக் கொண்டு படிக்கிறார் கள்.
பழங்காலத்தில் சம்பி ராதயப்படி, சாஸ்திர படி, பண்டிட் மூலம் திருமணம் நடைபெறு வது மாறி இப்போது ஆன்லைன் மூலம் திரு மணம் நடைபெறுகிறது. இன்னும் இந்த நிலை மாறி சுயமரியாதைத் திருமணம் நடைபெற வேண்டும்.
அமெரிக்காவில் மாப்பிள்ளை இருக் கிறார். இணையத்தில் பெண்ணை பார்க் கிறார். சென்னையில் வந்து விமானத்தில் இறங்குகிறார். உடனே திருமணம் நடைபெறு கிறது. ஓட்டலில் சாப் பிட்டுவிட்டு பறந்து விடுகிறார்கள். இதே போன்றுதான் நடக்க வேண்டும். அவர்கள் எந்த ராகுகாலம், எம கண்டம் பார்க்கிறார் கள். எனவே, இளை ஞர்கள் சுயமரியாதைத் திருமணம் செய்ய முன் வரவேண்டும் என பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறினார்.
எஸ்.எஸ்.இராஜ்குமார்
சுயமரியாதைத் திரும ணம் தத்துவமும், வர லாறும் என்ற நூலினை அறிமுகம் செய்து தஞ்சை திராவிட முன் னேற்றக் கழகத்தின் வழக்குரைஞர் எஸ்.எஸ். இராஜ்குமார் சிறப்பு ரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப் பிட்டதாவது :
இன்றைய தினம் தமிழர் தலைவர் அவர் கள் உலக புத்தக நாளை முன்னிட்டு சேலத்தில் சுயமரியாதைத் திரும ணம் தத்துவமும் வர லாறும் என்ற நூலை வெளியிடுகிறார்கள். எனக்கு இந்த நூலை தஞ்சையில் வெளியி டுவதற்கு வாய்ப்பளித்த திராவிடர் கழகத்தி னருக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன்.
இந்த அருமையான புத்தகத்தில், பல்வேறு செய்திகளை அடுக்கடுக் கான ஆதாரங்களுடன் தஞ்சை நா.மு.வேங்கடா சாமி நாட்டார், தமிழ் வேள் உமாமசுவரனார் போன்ற தமிழ் அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்களை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு சிறப்பான முறையில் எழுதியுள்ளார்.
திராவிடத்தால் வீழ்ந் தோம் என்று சொல்கி றார்களாம். எந்த நாட் டில் இருந்துகொண்டு சொல்வது. தமிழ்நாட் டில் இருந்து கொண்டா சொல்வது வெட்கம். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியா தைத் திருமண நோக்கம் பற்றி கூறுவது என்ன வென்றால், ஜாதி, மத, பேதமற்ற நிலை உருவா கத்தான் சுயமரியாதைத் திருமணம் என்கிறார் கள். 1930 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் பெண்கள்வீட்டில் இருந்து கொண்டு இருந்த நிலை மாறி, இப்பொழுது மேடையில் சரிநிகராக அமர்ந்து இருப்பதற்கு காரணம் திராவிட இயக் கம், தந்தை பெரியார். அண்ணா 1967இல் சுய மரியாதைத் திருமணத் திற்கு சட்டவடிவம் கொடுத்தவர் அண்ணா.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட, பகுத்தறிவுடன் சிந்திக்கக் கூடியவர். வாழ்வில் வெற்றி பெறுவர் என்ப தற்கு நூலகர் அவர்கள் நல்ல உதாரணம்.
தமிழர் தலைவர் அவர்கள் பல வெளி நாடுகள்செல்லும் போதெல்லாம் புத்தகங் களைத் தேடி, அதிலும் முக்கியமாக ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிப் படித்து தாமும் பயன் பெற்று மற்றவர்கள் பயன்பெற விடுதலையில் தமிழில் வடித்து எழுதி சிந்தனையை ஊட்டுகி றார்கள் என்று கூறி பல செய்திகளை எடுத்துக் கூறினார்.
விழாவில் படிப்பக உறுப்பினர்கள் மாவட் டத் துணைத் தலைவர் ப.தேசிங்கு, மாவட்ட ப.க. செயலாளர் கோபு பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலா ளர் இர.இளவரசன், நகர இளைஞரணி தலைவர் மா.திராவிடச் செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் கி.சவுந்தரராசன், தலை மையாசிரியர் தங்க. வெற்றிவேந்தன், பெரியார் பெருந் தொண்டர் தண்டாயுதபாணி, சு.வீர வேல், தி.இளந்தென்றல், சு.அருண்முருகன், நகர மாணவரணி தலைவர் என்.ஏ.ஆனந்த், ஒன்றிய மாணவரணி தலைவர் இரா.செந்தூரபாண்டியன், ஒன்றிய தி.க. செயலாளர் ஆட்டோ செ.ஏகாம் பரம், செ.சிகாமணி, ரவிக்குமார் என்ற காட் டான், செ.தமிழ்ச்செல் வன், குட்டிமணி, அம் மாபேட்டை ஒன்றிய மாணவரணி தலைவர் ரகுகுட்டி, தோழியர்கள் பி.மணிமொழி, நா.சத்யா உள்ளிட்ட ஏராளமான பொறுப் பாளர்களும், தோழர் களும் கலந்துகொண்ட னர்.
இறுதியாக திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளரும், படிப்பக உறுப்பினரு மான ம.திராவிட எழில் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை: