புதன், 1 பிப்ரவரி, 2012

சரண்யா மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில்

நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.
நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.
காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.
ஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை எற்படுத்தவிருக்கிறதோ. சென்சார் பிரச்சனையால் சரண்யா போஸ் கொடுத்த காட்சி நிழல் போன்று தான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: