ஞாயிறு, 29 ஜனவரி, 2012

வட கொரியா.. தலைமறைவாக போனாரா? அவரது ‘தலையே’ போனதா? பகீர் பகீர்!

viruvirupu.com
வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங்-இல் மரணத்தின்பின், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன் ஆட்சிக்கு வந்த பின்னணியில் மர்மம் இருப்பதாக தென் கொரிய மீடியா ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருந்தது. இப்போது அதிர வைக்கும் சந்தேகம் ஒன்று தென் கொரியாவில் இருந்து வெளியாகியுள்ளது.
மூத்த மகன் கிம் ஜொங்-நாம். இவர்தான் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்து டோக்கியோவில் அகப்பட்டவர்
“புதிய தலைவரின் இரு மூத்த ககோதரர்களும் இன்னமும் உயிருடன் உள்ளனரா? அல்லது, அவர்களுக்கு சமாதி கட்டிய பின்னர்தான் இவருக்கு தலைவர் பட்டம் கட்டினார்களா?” என்பதே இந்த சந்தேகம். இது இப்போது தென் கொரிய மீடியாவில் படு சூடாக ஓடிக்கொண்டு இருக்கிறது!
வடகொரியத் தலைவர் இறந்தபோது அவரது மரணம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டது.

புதிய தலைமைக்கு செய்யப்பட வேண்டிய ‘முன்னேற்பாடுகள்’ செய்யப்பட்ட பின்னரே தலைவரின் மரணச் செய்தி வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் புதிய தலைவராக இளைய மகன் கிம் ஜொங்-உன் அறிவிக்கப்பட்டார்.
மரணம் எதற்காக உடனே வெளியிடப்படவில்லை என்பதற்கான விபரம் இறுதிவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த புதிய தலைவருக்கு இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர். கிம் ஜொங்-நாம், கிம் ஜொங்-சோல் என்பது அவர்களது பெயர்கள்.
நாட்டின் தலைமை தலைவரின் குடும்பத்துக்குள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
இறந்துபோன தலைவரின் முதல் இரு வாரிசுகளையும் ஒதுக்கிவிட்டு, வயதில் இளையவரான (29 வயது என்கிறார்கள்) மூன்றாவது மகன் தலைவரானதுகூட ஆச்சரியம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இறந்துபோன தலைவரின் இறுதிச் சடங்குகளில்கூட முதல் இரு வாரிசுகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றே இப்போது சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
இறந்துபோன தலைவரின் இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல், இப்போது அவரது 30
இரண்டாவது மகன் கிம் ஜொங்-சோல் ரகசியமாக எரிக் க்ளெப்டனின் இசை நிகழ்ச்சியை காண சிங்கப்பூர் சென்றபோது, கே.பி.எஸ். டி.வி. சேனல் அவரை படம் பிடித்தது.
வயதுகளில் உள்ளார். (இவர் இறந்துபோன தலைவரின் 2-வது மனைவியின் முதலாவது மகன். 2-வது மனைவியின் 2-வது மகன்தான் தற்போது தலைவராகவுள்ள கிம் ஜொங்-உன்). அதாவது தற்போதைய தலைவரின் முழு சகோதரர், அதுவும் மூத்த சகோதரர் இவர்.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரது தலை தென்படவில்லை.
இளைய மகன் கிம் ஜொங்-உன். இவர்தான் இன்று வட கொரிய ஜனாதிபதி. இவர் தமது சகோதரர்களை கொன்று விட்டார் என்பதே தென்கொரிய மீடியாவின் குற்றச்சாட்டு
கொரிய தலைமைக் குடும்பங்களில் போட்டியாளர்களை கொல்வது சகஜம், அவர்கள் சொந்த சகோதரர்களாக இருந்தால் கூட. சில புத்திசாலி சகோதரர்கள் தாம் நாட்டில் இருந்தால் கழுத்தில் கத்தி விழும் என்று ஊகித்துக் கொண்டு, வெளிநாடுகளில் தங்கியிருக்கக்கூடிய அரசு பதவிகளை (வெளிநாட்டு தூதர்) பெற்றுக்கொண்டு கொரியாவுக்கு வெளியே தங்கியிருப்பது வழக்கம்.
இறந்துபோன தலைவரின் 1-வது மகன் கிம் ஜொங்-நாம் செய்ததும் அதைத்தான். இவருக்கு இப்போது வயது 40களில் இருக்கலாம்.
தலைவரின் 2-வது மனைவியின் பிள்ளைகளின் கை ஓங்குவதைப் புரிந்துகொண்டு, 1-வது மனைவியின் மூத்த மகனான இவர், வட கொரியாவின் வெளிநாட்டு தூதராக ஐரோப்பாவில் இருந்து கொண்டார்.
இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த முதலாவது மகனைத்தான் தமக்கு அடுத்த தலைவராக முன்பு அறிவித்திருந்தார் கிம் ஜொங்-இல். 2001-ம் ஆண்டுவரை இவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலைமை இருந்தது.
2001-ம் ஆண்டில் இந்த மகன் போலி பாஸ்போர்ட் ஒன்றில் பயணம் செய்யும்போது, ஜப்பானின் டோக்கியோ நரிடா ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்பட்டார். (இவர் யார் என்று தெரியாமல் தடுத்து வைத்தார்கள்)
இந்த விவகாரம் வட கொரியாவுக்கும், அதன் தலைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கிம் ஜொங்-நாம் அடுத்த தலைவர் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் தந்தை.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் இவரும் மிஸ்ஸிங்!
தற்போதைய தலைவரின் இந்த இரு சகோதரர்களும் எங்கே உள்ளார்கள் என்ற தகவல் ஏதும் கிடையாது. கிம் ஜொங்-இல் இறந்துபோன விஷயத்தை உடனே அறிவிக்காமல் தாமதம் செய்த காரணமே, இந்த இரு சகோதரர்களையும் மேலே அனுப்பி வைப்பதற்கு என்கின்றன தென் கொரிய மீடியாக்கள்.
“முடிந்தால், அவர்களை உயிருடன் காண்பிக்கட்டும், நாம் தலையை தரையில் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று சவால் விட்டிருக்கிறது எம்.பி.சி. டி.வி. சேனல்.

கருத்துகள் இல்லை: