வியாழன், 2 பிப்ரவரி, 2012

Facebookகை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை!


Indian Army Personnel Prohibited Facebook
ராணுவ ரகசியங்கள் வெளியாவதை தடுக்கும் வகையில், ஃபேஸ்புக்கை பயன்படுத்த ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளது ஃபேஸ்புக். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் ஃபேஸ்புக் பற்றிய பேச்சு தான் அதிகம் இடம் பெறுகிறது. இப்படி சிறியவர்கள் முதல் பெரிய வசதில் உள்ளவர்கள் வரை, மனதை ஆக்கிரமித்த பேஸ்புக்கிற்கு இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது.

இந்திய ராணுவத்தினர் ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற சோஷியல் மீடியாவை பயன்படத்த கூடாது என்று இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.  ராணுவ உடையுடன் கூடிய எந்த புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது என்றும், ராணுவம் சம்பந்தப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிட கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி இந்திய ராணுவத்தினர் இது போன்ற சோஷியல் மீடியாவில் புகைப்படத்தையோ அல்லது ஆயுதத்தின் புகைப்படத்தையோ வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக இந்திய ராணுவம் பற்றிய ரகசியங்கள் வெளியாக அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, இந்த உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை விதித்துள்ள தகவல் 36,000 ராணுவ அதிகாரகளுக்கும், 11 லட்சத்தி 30 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: