ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தேடல் டிராமா போலீஸ் திவாகரனை தப்பவிட்டது

முதல்நாள் திவாகரனை கைது செய்யச் சென்ற போலீஸ், தேடல் டிராமா நடத்திவிட்டு அவரைத் தப்ப வைத்த விவகாரம் கார்டன் கவனத்துக்கு உடனடியாகப் போய்விட்டது

சசிகலா தம்பி திவாகரனைத் தேடி, காக்கிகள் நடத்திய கண்ணாமூச்சி ஆட்டத்தைப் பற்றி, கடந்த இதழ் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரையே கொடுத்திருந்தோம்.
இதன்பின் திவாகரனைத் தேடி பல இடங்களிலும் வலை வீசிய போலீஸ், சென்னை தி.நகரில் தங்கியிருந்த ப்ரியா வீட்டையும் விட்டு வைக்காமல் தேடி அலசினர்.
தேடல் பற்றிய முழு விபரமறிந்த அந்த ஆளும்கட்சிப் பிரமுகரே விவ ரிக்கிறார்.‘""முதல்நாள் திவாகரனை கைது செய்யச் சென்ற போலீஸ், தேடல் டிராமா நடத்திவிட்டு அவரைத் தப்ப வைத்த விவகாரம் கார்டன் கவனத்துக்கு உடனடியாகப் போய்விட்டது. இதனால் கொதித்துப்போன கார்டன் தரப்பு, கோட்டை விட்ட போலீஸை வச்சே ஓடிப்போன திவாகரனைப் பிடிக்க ணும்ன்னு திருச்சி சரக ஐ.ஜி. அலெக் சாண்டர் மோகனுக்கு கடுமையான உத்தரவைப் போட்டது. அதனால் அந்த 21- ந் தேதி இரவே தஞ்சையில் வந்து தங்கிய ஐ.ஜி., அங்கிருந்து டி.ஐ.ஜி. அமல்ராஜையும் அழைத்துக் கொண்டு திருவாரூருக்கு விரைந்தார். அங்கு எஸ்.பி சேவியர் தன்ராஜ் தலைமையிலான முதல் ஆபரேசன் டீமுக்கு பலத்த அர்ச்சனை நடத்தியவர், அவசர கதியில் காவல்துறை அதிகாரிகள் கூட் டத்தைக் கூட்டினார்.

அதில் பேசிய ஐ.ஜி., எப்படியும் திவா கரனை கைது செய்தே ஆகவேண்டும். அது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்க விடக்கூடாது. ஒருவேளை அவர் முன் ஜாமீனே வாங்கிவிட்டாலும் அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு கைது செய்யத் தயாராக நாம் இருக்கணும். இப்ப அவரை பிடிக்க நாகை ஏ.டி.எஸ்.பி மணிமாறன், நன்னிலம் டி.எஸ்.பி. ஜெய சுப்பிமணியன் போன்றோர் தலைமையில் இப்போது தனிப்படைகள் அமைக்கப்படுகிறது. எனவே இந்தப் படைகள் தீவிரமாகத் தேடுதல் வேட்டையை நடத்தவேண்டும். இப்பவும் நமக்குள்ள யாராவது திவாகரனுக்கு வேண்டிய போலீஸ்காரங்க இருந்தீங்கன்னா... இப்பவே கிளம்பிப் போயிடுங்க. இல்லை லீவு போட்டுட்டு போயிடுங்க'ன்னு கறாராவே உத்தரவு போட்டுவிட்டுக் கிளம்பினார். அதன்பிறகுதான் காவல்துறை சுறுசுறுப்பானது'' என்றார் கிசுகிசுப்பாக.

அன்று இரவே தஞ்சை அருளானந்தம் நகரில் இருக்கும் மகாதேவன் வீட்டுக் கதவை அதிரடியாகத் தட்டிய ஒரு டீம், திவாகரன் எங்கே? என்றபடி கிடுகிடுவென வீட்டுக்குள் புகுந்தது. இன்ஞ் இன்ஞ்சாய் சோதனை நடத்தியது. இதைப் பார்த்த மகாதேவன் தரப்பு ‘அடுத்து நம்மையும் இப்படித்தான் தேடுவார்களா? என்று ரொம்பவே ஆடிப்போனது. ரொம்பவே முகம்வெளிறிப் போன மகாதேவன், அன்றே சென்னைக்குக் கிளம்பிப் போனவர், கட்சியின் முக்கிய புள்ளிகள் மூலம் சமாதானம் பேசும் முயற்சியில் இறங்கினார். எனினும் இந்த நிமிடம்வரை கார்டனின் கதவு அவர் தரப்பிற்குத் திறக்கப்பட வில்லை.

அதேபோல் அன்று இரவு 10.30 மணிக்கு இன்னொரு காக்கிகள் டீம், விளார் பைபாசில் உள்ள எம்.நடராஜனின் அண்ணன் சாமிநாதன் வீட்டில் ரெய்டை நடத்தியது. திவாகரன் இங்கு இருக்கமாட்டார் என்று தெரிந்தும்கூட இந்த சோதனைக்குக் காரணம்... எம்.என் தஞ்சையில் நடத்திய பொங்கல் விழாவில், மன்னார்குடி வகையறாவில் யாரும் கலந்து கொள்ளாதபோது, இந்த சாமிநாதன் மட்டும் ஆடம்பரமாகக் கலந்துகொண்டார். அதனால் இவருக்கு பயம்காட்டும் நோக்கில்தான் இந்த சோதனை என்கிறார்கள் காக்கிகள் தரப்பினரே..





திவாகரனின் பஸ்களை கவனித்து வரும் அசோகன், சசிகலா அண்ணியான இளவரசியின் சகோதரர் கோட்டூர் அண்ணாதுரை, திவாகரனின் வலதுகரமாகத் திகழ்ந்த மாஜி மா.செ. எஸ்.காம ராஜ் என பலரையும் கொண்டுபோய்க் குடைந்தனர். எல்லோருமே ‘""நாங்க யாரும் இப்ப அவரோட தொடர்பில் இல்லை. இதுதான் உண்மை''’என அழுத்தமாய்ச் சொல்ல, திவா பற்றிய க்ளூ கிடைக்காமல் திகைத்துப்போயிருக்கும் காவல்துறை, அடுத்து ஒரு அமைச்சரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரும் வியூகத்தில் இருக்கிறது.

யார் அந்த மந்திரி?

""திவாகரின் தீவிர விசுவாசியாக இருக்கும் அந்த டெல்டா பகுதி மந்திரிக்கு, திவாகரனின் ஒவ்வோரசைவும் தெரியும். சமீபத்தில் கூட திவாகரனுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாதுன்னு தன் வீட்லயும், ஆஞ்சநேயர் கோயில்லயும் ஸ்பெஷல் யாகத்தை சீக்ரெட் டாக நடத்தினார். இவரது வீட்டில் திவாகர் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால் இவர் வீட்டில் சோதனை நடத்தவும், அவரிடம் விசாரணை நடத்தவும் மேலிட சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். மதுக்கூர், தம்பிக்கோட்டை பகுதிகள்லயும் தேடி வருகிறோம். விரைவில் அவரை மடக்கிடுவோம்''’ என்கிறார் அந்த அதிகாரி நம்மிடம்.

திவாகரனின் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. புள்ளிகள் அவருக்கு அடைக்கலம் தந்திருக்கலாமோ என அவர்கள் பக்கமும் தேடல் பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறது.

எது எப்படியோ, க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிக் கொண்டி ருக்கிறது திவாகரனின் கைதுப் படலம்.

-செம்பருத்தி

தோண்டப்படும் கொலை வழக்கு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட மாஜி வெங்கடாசலம் உயிரோடு இருந்தபோது அவரிடம் ""கீழாத்தூர் கிராமத்தில் சுகர் பேக்டரி கட்டணும். நிலம் வாங்கி கொடுங்க. உங்களையும் கௌரவ பார்ட்னரா சேர்த்துக்கறேன்''’என்றபடி அந்தப் பகுதியில ஏறத்தாழ 170 ஏக்கர் நிலத்தை டாக்டர் வெங்கடேசனின் சம்பந்தியின் சம்பந்திகளான ஆலங்குடி கண்டியர்கள் பவ பத்திரம் மூலம் வாங்கியுள்ளனர். இந்த நிலம் மிடாஸ் மோகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பத்திரங்களை அ.தி.மு.க பிரமுகரான பத்திர எழுத்தர் முருகேசன்தான் தயார் செய்து பதிவு செய்து கொடுத்திருக்கிறார். இதிலும் முறைகேடு என்று ஒரு பக்கம் துருவிக்கொண்டிருக்கிறது காவல்துறை. இதேபோல் சசிதரப்பு புலியூரில் நிலம் வாங்கப்போக, மாஜி வெங்கடா சலமோ அவர்களுக்கு எதிர்தரப்பான சிவபாரதி கல்வி நிறுவனர் தனசேகரனுக்கு நிலம் வாங்கிக்கொடுக்க முயன்றார். அப்போது இருதரப்பிற்கும் சச்சரவு உண்டானது. இந்த காலகட்டத்தில்தான் வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான சில சீக்ரெட் தகவல்களைத் திரட்டிவைத்திருக்கும் காவல்துறை, கொலை வழக்கையும் மன்னார்குடித் தரப்பிற்கு எதிரான அஸ்திரமாக ஆக்கலாமா? என்ற யோசனையோடு, சிலரைக் குறிவைத்தும் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறது.
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை: