| கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் விரைவில் இலங்கைக்கு தருவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. |
| இலங்கையைச் சேர்ந்த தம்பதியரும் மற்றுமொரு நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் காரின் பின் ஆசனத்தில் பயணித்தவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் காரில் பயணித்த மற்றுமொரு பெண் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். |
ஞாயிறு, 21 நவம்பர், 2010
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இலங்கையர்கள் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக