ஞாயிறு, 21 நவம்பர், 2010

இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் பூரண மதச் சுதந்திரம் கிடையாதென அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மதச் சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென அரசாங்கம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்த போதிலும் உண்மையில் நிலைமை அதுவல்ல என அமெரிக்காவின் மதச் சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யமாறு கோரி மஹா சங்கத்தினர் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2500 ஆண்டு பௌத்த மத வரலாற்றில் மிகவும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே மஹாசங்க அமர்வுகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த மன்னருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் இந்த அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறெனினும், இந்த அமர்வுகளை அரசாங்க அமைச்சர்கள் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: