சனி, 8 மே, 2010

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் வேரோடு களையப்படும்

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சம்பவங்களின் பின்னணியிலுள்ள குழுக்கள் விரைவில் வேரோடு களையப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த பாயராஜபக்ச அறிவித்துள்ளார்.

இவ் அறிவிப்பைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமக்கு விடுத்துள்ளதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா தெரிவித்தார். யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பான மாநாடு நேற்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா தலைமையில் யாழ்ப்பாண நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

இம் மாநாட்டில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தசேனன், பருத்தித் துறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகா தேவா, சிரேஷ்ட சட்டத்தரணிகள், வட மாகாணப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர், யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த. விக்னராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு நீதிபதி மேலும் கூறுகையில

கருத்துகள் இல்லை: